Wednesday, April 18, 2012

பஸ்காவும் இராப்போஜனமும்

ஆகையால்,நீஙகள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே,புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப் போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல,துர்க்குணம் பொது ல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பதோடே பண்டிகையை ஆசரிக்கக் கடவோம்." (1 கொரி 5:7,8
பஸ்காவைக் குறித்தும், இராப்போஜத்தைக் குறித்தும்.அப்பம் பிட்குதலைக்குறிதும் அநேக சபைகளில் தப்பறையான போதகங்கள் உள்ளன. இதனால் சில சபைகளில் அனுதினமும் அப்பம் புசிக்கிறார்கள், சில சபைகளில் வாரம் ஒரு முறையும் வேறு சில சபைகளில் மாதம் ஒரு முறையும், இன்னும் சில சபைகளில மூன்று மாதஙகளுக்கு ஒரு முறையும்,பகல் வேளையில் அப்பம் புசிக்கிறார்கள். இதெர்க்கெல்லாம் காரணம் சரியான வேதஞானம் இல்லாதது தான்.


ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்அந்த ஆவி எல்லாவற்றையும்,தேவனுடைய ஆழங்களையும்,ஆராய்ந்திருக்கிறார்." (1 கொரி. 2:14,10)

அப்பம் பிட்குதல்:
வேதத்தை நாம் தீர்க்கமாக ஆராய்ந்தால் அப்பம் பிட்க்குதல வேறு, இராப்போஜனம் வேறு என்பதை அறிந்து கொள்ளலாம். அப்பம் பிட்குதல் என்பது சகோதரர்கள் கூடி வந்திருக்கையில் சகோதர ஐக்கியத்தையும்

Friday, February 10, 2012

வேதவசனம் சொல்வது என்ன?

மரணம் என்றால் மரணமென்றல்ல, மரணப்படுக என்றால் மரணத்திற்கு முன்புள்ளதைகாட்டிலும் கூடுதலாக ஜீவனும் பலனும் கிடைக்கும் எங்கின்ற கற்பனையில் அசஸ்திபாரமிட்டது என்று மேலே சொல்லப்பட்ட எல்லா சித்தாடந்தங்களும் அமைந்திருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும், நீ சாகவே சாவாய் என்று ஏதேனில் வைத்து ஆதி மாதா பிதாக்களிடம் தேவன் சொன்னார். நீங்கள் மரிப்பதில்லை என்று சொன்னது சாத்தான். கிறிஸ்துவர்கள் என்ற ஜாதிகள் சாத்தானுடைய பொய்யை விசுவாசித்து தேவன் அருளி செய்ததை புறக்கணித்தார்கள் என்று நமக்கு புரிகிறது. நீங்கள் ஒருபோதும் மரிப்பதில்லை என்கின்ற பாம்பினுடைய சொல்லில் தானே அவைகள் சேருகிறது. மரித்தவர் ஜீவிக்கிறார், மரணத்திற்கு முன்பு உண்டாயிருந்தைக்காட்டிலும் சக்தியுள்ளவராயிருக்கிறார்கள் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவார்கள். இல்லையா? நண்பர்களே, இங்கே தான் நாமெல்லோருக்கும் ஒரே மாதிரி தவறுகள் வருகிறது. சத்தியம் அவனிடத்தில் இல்லை என்றும் சத்தியத்தில் நிலை நிற்கவில்லை என்றும் அவன் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான் (யோவா:8:44) என்றும் கர்த்தர் யாரக்குறித்து சொன்னாரோ அந்தத் தவறான அறிவுரையே நாம் பின் தொடர்ந்திருக்கிறோம்.

பல நூற்றாண்டுகளாக ஜாதிகளுக்கிடையில் பிரபலமாயிருந்தாலும் அந்தகாரயுகத்தில் தான் இந்த பொய் சித்தாந்தங்கள் கிறிஸ்து சபையில் பிரபலம் அடைந்த்து. அந்த இருள் வருவதற்கு இந்த உபதேசங்களுக்கு மிக பெரிய பங்கு இருந்தது. நம்முடைய முற்பிதாக்கள், நீ சாகவே சாவாய் என்ற தெய்வ வார்த்தையை விசுவாசித்திருந்தால் மரித்தவர்களுக்காக உள்ள ஜெபம், அவருடைய பாவ சாந்திக்குள்ள் திவ்விய பலிகள், அவருடைய தண்டனையைக் குறித்துள்ள பயமுறுத்துகின்ற சிந்தைகள் இவைகளுக்கு இடமில்லதிருந்திருக்கும். மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் (பிரசங்கி.9:5) அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களை கவனியான் (யோபு.14:21) இந்த வசனங்களோடும் வேதம் ஆதிமுதல் அந்தம் வரை துணை நிற்க்கிறது.

மரித்தவருடைய நிலை (நிலைமை):-

மரித்தவர் எங்கே என்றும் அவருடைய நிலை என்ன என்றும் வேத புத்தகம் நமக்கு போதிக்கிறது. அதன்படி அவர்கள் சுக துக்கங்கள் பாக்கியம், பாக்கியமின்மை இதையெல்லாம் அனுபவிப்பதோ, மரித்தவரை உணர்த்தப்படும் வரை சூரியனுக்கு கீழே நடக்கின்ற எந்த ஒரு காரியமும் அறிவதேயில்லை. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பலத்தோடே செய். நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே எங்கின்ற ஞானியினுடைய வசனங்களை நாங்கள் உங்களுக்கு ஞாபகபடுத்துகிறோம். (பாதாளத்தில் - பிரேதக்குழியில் - ஷியோலில்).

பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பொல்லாதவரும் மீதியுள்ளவரையும் குறித்து அவர் மரணத்தில் நித்திரை என்று துல்லியமான நிலையில் தான் எழுதியிருக்கிறது என்று உங்களுடைய கவனத்திற்கு நாங்கள் கொண்டுவருகிறோம். இயேசுவில் நித்திரை செய்கின்றவரையும், கிறிஸ்துவில் நித்திரை செய்கின்றவரையும் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறதை உங்களுடைய ஞாபகத்திற்கு கொண்டுவருகிறோம். மரித்தவர் உயிர்த்தெழாவிட்டால் அவர் நரகத்திற்கு சென்றதாக பவுல் சொல்கிறார். கிறிஸ்துவுக்குள் நித்திரயடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே (1கொரி:15:18), பரலொகத்திலோ சுத்தீகரண இடத்திலோ, நரக வேதனையிலோ அவர்களுக்கு கட்டுபடுவதற்கு முடியுமா? அப்படியாக யாரும் உபதேசிக்கவில்லை. அது நிச்சயம். அவர்கள் இப்போதே கெட்டுப் போன நிலையில் தான் இருக்கிறார்கள். மரணத்தினுடைய வல்லமையில் இருந்து விடுதலைக்காக ஒரு உயிர்த்தெழுதல் இல்லாமல் இருந்தால் இந்த நாசம் பரிபூரண நாசத்திற்கு வழி வகுத்திருக்கும். ஆகையால் தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவவளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான்.3:16)

சுருக்கமாக சொன்னால் தெய்வம் மனுஷன் சிருஷ்ட்டிப்பில் உயர்ந்தபடியில் தன்னுடைய ரூபத்திலும் சாயலிலும் உண்டாக்கினார் என்றும், ஏதேனில் அவன் ஜீவன் அதனுடைய பரிபூரண அளவில் இருந்ததென்றும் நிறைந்த கீழ்படிதல் கொண்டு அதை நிலை நிறுத்தியிருந்திருப்பார் என்றும் வேதபுத்தகம் சொல்லுகிறது ஆனால் சோதனையில் அல்லது பரீட்சையில் அவன் தோற்றுப் போகவும் மரண தண்டனைக்கு பாத்திரனாகவும் செய்தான். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் (ஆதிய:2:17) மரணம் அங்கே ஆரம்பித்தது, 930 வருடங்களுக்கு பிறகு ஆதிபிதாவான ஆதாமினை பிரேதக்குழியில் அடக்கம் செய்தும், அவனுடைய சந்ததி பாரம்பரியமாக அவனுடைய பலவீனத்திலும், மரண தண்டனையில் வந்தடையவும் செய்தது. அவன் அந்த நாளில் மரணமடைந்த அது 24 மணி கொண்ட ஒரு நாளல்ல பதிலாக ஓராயிரம் ஆண்டு நாட்கள் என்று அப்போஸ்த்லனாகிய பேதுரு குறிப்பிட்டிருக்கிறார். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போல. (2 பேதுரு.3:8)

தெய்வீக ஸ்நேகம் காணப்பட்டது:

இந்த மகா 6 நாட்களில் (ஆறு தினங்களின்) காலங்களில் மரண தண்டனை மனுஷனை சில விஷங்களில் மிருகத்தினுடைய பிடியில் அமர்ந்ததும், தெய்வம் தயையால் உயிர்த்தெழுதல் தராமல் போயிருந்தால் வருங்கால வாழ்க்கை நம்பிக்கையற்ற நிலையில் வந்திருந்திருக்கும். ஸ்திரியின் சந்ததி பாம்பின் தலை நசுக்கும் என்ற வசனத்தில் இது அடங்கியிருக்கிறது. பூமியிலுள்ள வம்சங்களை எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். (ஆதி.12:3;28:14)என்று இதைக்குறித்து அபிரகமுக்கு ஒரு தடவை மேலும் கடவுள் விவரித்தார். ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்கு பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களின் நிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்.(1 பேதுரு 3:18) பிதாவான ஆதாமினுடைய தண்டனையை சொந்தமாய் ஏற்றெடுத்துக் கொண்டு மனித குலத்தை ரட்சிப்பதற்காக தெய்வம் தம்முடைய ஒரே குமாரனை அனுப்பினது ஆயிரமாண்டு மகாதினங்களில் நான்கு தினங்கள் முடியும் போதுதான். கல்வாரியில் நிவர்த்தியாக்கின அந்த மீட்பு வேலையின் பலனாக நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது (அப்போ:24:15 மரண தண்டனையில் இருந்தும் பிரேதக்குழியான தடவறையில் இருந்தும் விடுதல் பெற வேண்டியதாயிருக்கிறது.

நித்திய தண்டனையல்ல மரணம் தான் :

பாவத்தின் சம்பளம் நித்திய தண்டனையல்ல மரணம் தான் என்று திருவசனங்கள் (ரோமர்.6:23) தெளிவாக போதிப்பிக்கும் பொழுது, ஆதாமினுடைய பாவத்தின் சம்பளம் நித்திய தண்டனை தான் என்று அங்கீகரிப்பதில் உள்ள பொய்யை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய வீழ்ச்சியிலேயும் அவன் மேல் சுமத்தப்பட்ட நியாயத் தீர்ப்பினையும் குறித்து ஆதியாகமம் புத்தகத்தில் கொடுத்திருக்கின்ற அந்த விவரத்தை நாம் பரிசோதிக்கும் பொழுது கேவலம் மரண தண்டனையை குறித்தல்லாமல் ஒரு நித்திய வருங்கால தண்டனையைக் குறித்து ஒரு முன்னறிவிப்பும் நமக்கு கொடுக்கப்படவில்லை. அதற்கு யாதொல்ரு முன்னறிவிப்பும் பார்ப்பதற்கு இல்லை. இரண்டாம் தடவையாக இதை திரும்பவும் கர்த்த்டர் சொல்லுகிறார், நீ பூமிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்கு திரும்பப்படும் என்று. பிசாசுக்களையோ, அக்கினி தண்டனைகளையோ இவைகளைக் குறித்த்து ஒரு வார்த்தைக் கூட உரையாடவில்லை.

இந்த நிலையில் கடந்த கால உபதேசங்கள் என்று அப்போஸ்தலன் நாமகரணம் செய்யப்பட்ட பொய்யான உபதேசங்களைக் கொண்டு சத்துரு நமது பிதாக்களை இருட்டின் யுகத்திற்கு வஞ்சித்ததெப்படி? பாவத்திற்கு மரணதண்டனை அல்லாமல் வேறொன்றும் தீர்க்கதரிசனங்களில் சொல்லப்படவில்லை என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புதிய எற்பாடும் இதற்கு சேர்ந்ததாகத்தான் இருக்கிறது என்று பார்க்க வண்டும். புதிய எற்பாட்டில் முக்கால் பங்கும் எழுதியிருக்கின்ற பரிசுத்தனாகிய பவுல் தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். (அப்போ:20:26) என்று நமக்கு நிச்சயத்தை தருகிறார். ஆனாலும் நித்தியதண்டனையைக் குறித்த ஒரு உபதேசமும் அவர் தரவேயில்லை. பதிலாக பாவத்தையும் அதனுடைய தண்டனையையும் குறித்துள்ள இதே காரியம் தான் உபதேசித்துக் கொண்டு எப்படியாக ஓரே மனுஷனாலே பாவமும், பவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லோருக்கும் வந்தது போலவும், இதுவுமாயிற்று.: (ரோமர் .5:12) என்று சொல்லியிருக்கிறார். ஒரே மனுஷனிலோ எல்லா மனுஷரிலோ வந்தது நித்திய தண்டனையல்ல, மரணம்தான் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

மரணம் போதுமன தண்டனையா?

மரணம் பாவத்திற்கு போதுமான தண்டனையல்ல என்று யாராவது சொன்னால், நாம் செய்ய போகிற காரியங்களை காட்டி அந்த வாதங்கள் நியாயமானதல்ல என்று புரியவைப்பது தான். கீழ்படியாமையினால் வந்த பாவம் முகாந்திரம் ஆதாமிற்கு அவனுடைய பாக்கிய வீடாயிருந்த பறுதீஸ் இல்லாமல் போயிற்று. பூரண ஜீவனும் போயிற்று. பதிலுக்கு நோயும், வேதனையும் துக்கமும், மரணமும் வந்தது. இதற்கும் மேலே 3000 கோடிக்கதிகமாக வருகின்ற அவனுடைய வம்சபரம்பரை மொத்ததில், பிதாவில் இருந்து மனதிலும், சரீரத்திலும் பலவீனங்கள் ஜன்ம சுபாவமாக பெற்றுக்கொண்டும், அப்போஸ்தலன் சொல்லியிருக்கிறது போல சர்வ சிருஷ்ட்டியும் ஏகமாய்த்தவித்து பிரசவ வேதனைப்படுகிறது. (ரோமர்.8:22) ஆனால் ஆசீர்வாதங்கள் இப்படி பிதாக்கள் பாரம்பரியமாக கிடைத்ததில்லை.

3000 கோடியிலும் அதிகமாக வருகின்ற மக்கள் துர்குணத்தில் உருவாகியும் பாவத்தில் கர்ப்பம் தரித்திருக்கின்ற நிலைமையை (சங்கீ 51:5) பாருங்கள். துக்க்கத்திலும் கீழ்ப்படியாமையிலும் கடந்து போன சில மணி நேரமோ, தினங்களோ, ஆண்டுகளோ அவர்களை மரணகிடக்கைக்கு கொண்டு வந்ததிருக்கிறது. கண்ணீர் விட்டுக்கொண்டு துக்கிக்கின்ற இதயங்களுமாய் நண்பர்கள் அந்த மரணகிடக்கைக்கு அருகாமையில் நின்றார்கள். வெண்ணீரோடு வெண்ணீராய், பொடியோடு பொடியாய் அவர்கள் பிரேதக்குழிக்குள் கொண்டு செல்லப்பட்டார்கள். சுற்றுபாடுகள் கணக்கிலெடுக்கும் போதும் நோய், துக்கம், வேதனை, மரணம், மனதளவிலும், சன்மார்கத்திலுமுண்டான தோல்வி, இவைகள் பூரணமாகவும் பிதாவாகிய ஆதாமினுடைய பாவத்தின் பலனாக வந்தது என்று ஞாபகத்திற்கு கொண்டு வரும்போது விதித்திருக்கின்ற தண்டனை போதுமானதல்ல என்றும் இதைக் காட்டிலிலும், அனேக லட்சங்கள் மரண யாத்திரையில் அந்தமில்லா கஷ்டங்களும் பாயப்படுதலும் ஆழமான நரகத்திற்கு பிசாசுகளால் உபத்திரவப்பட்டு வாழலாம் எங்கின்ற நீதி தேவைப்படுமென்றோ, தேவைப்படுவதற்கு முடியுமா என்றோ புத்தியுள்ளவர் யாராவது சொல்லுவார்களா? அன்பு நண்பர்களே யாராவது ஒருவர் இந்த நிலைமையில் சிந்திப்பது, சிந்தித்து ஒரு தீர்மனம் எடுப்பவர் ஒருபோதும் யுக்தி சிந்தை, ஞானம் ஒன்றும் அவர்களுக்கு இல்லை என்றும் அல்லது இவைகள் எல்லாம் போயே போச்சு என்றுதான் காட்டுகிறது.

தெய்வம் நிச்சயித்த தண்டனை நீதி பூர்வமானது:

மரண தண்டனை நீதிக்கு விபரீதமென்றோ, மிகவும் அதிகமென்றோ யாரும் சிந்திக்க வேண்டாம். குற்றவாளீயான ஆதாமினை அழித்துக்கொண்டு தெய்வத்திற்கு, தம்முடைய நியாயத்தீர்ப்பு நடப்பாக்கியிருந்திருக்கலாம். ஒரு நொடி பொழுதில் வம்ச நாசம் செய்திருந்திருக்கலாம். ஆனால் அந்த மார்க்கம் இவையைக்காட்டிலும் நன்றாக இருந்திருக்குமா? ஒருபோதும் இல்லை. தரித்திரத்திலும், கஷ்டத்திலும் துக்கத்திலும் கூட வாழ்க்கை இன்பமுள்ளதாயிருக்கிறது. இதற்கும் மேலே ஒவ்வொரு மனிதனோடும் எங்கின்ற ந்லையிலுள்ள ஒரு சோதனைக்கு இடம் கிடைக்கும் பொழுது பிதாவான ஆதாமுக்கு கிடைத்தைக் காட்டிலும் அறிவு பூர்வமான ஒரு காரியம் கிடைப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவதில் இந்த ஆயுளில் பரீட்சைகளூம், அனுபங்களும் சமாதான நியமங்கள் போல நமக்கு உதவியாக அமைய வேண்டுமென்று தான் தேவசித்தம். திவ்வியமான கருணையும், ஜீவிப்பிக்கின்ற வேளையும் உயித்தெழுதல் வேளையும் இல்லாமலிருந்தால் நாத்திகர்கள் சொல்லுகிறது போல தான் நம்முடைய வர்கத்திற்கு வரும்கால ஜீவிதத்தில் நம்பிக்கை இல்லமல் இருந்திருக்கும்.

நம்முடைய மீட்புக்கு இயேசு மரித்தார் என்ற காரணத்தால், தண்டனையுடைய வேறோரு தெளிவும் கூட நமக்கு பார்க்க முடிகிறது. நமக்கு எதிராயுள்ள தண்டனை நித்திய தண்டனையாக இருக்குமென்றால் நம்முடைய தண்டனைக்கு இயேசுவும் அந்த விலை தான் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். நீதிமானாகிய அவர் நீதி கெட்டவர்களுக்காக நித்திய தண்டனை அனுபவிப்பது ஆசியமாயிருந்திருக்கும். ஆனால் நித்திய தண்டனையல்ல நம்முடைய சிட்சை. ஆதலால் நமக்காக அவர் நித்திய தண்டனை அனுபவித்ததேயில்லை. மரணம் மட்டும் தான் சிட்சை. அல்லது மரணம் மட்டும் தான் தண்டனை. ஆதலால் கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். தேவனுடைய கிறுபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார்.(கொரி.15:3; எபிரேயர்.2:9) அதாமினுடைய பாவத்திற்கு மறு விலையாக மாற முடிகின்றவர்களுக்கு சர்வலோகத்தின் பாவத்திற்கு திவ்விய நீதியின் முன்பாக விடுதலை பெற முடியும். காரணம் ஆதாம் ஒருவர் மட்டும் தான் சோதிக்கப்பட்டார். ஆதாமினுடைய சந்ததிகளாகிய நாம் அவர் முகாந்திரம் (ஆதாம் முகாந்திரம்) அவைகளில் பங்குள்ளவராக மாறினோம்.

(தொடரும்...)

Monday, November 28, 2011

பிராட்டஸ்டாண்டுகளினுடைய பதில்:

கடந்த காலங்களில் அனேகரும் பிராட்டஸ்டண்டுகளினுடைய திறந்த இதயத்திலும் அறிவிலும் கல்விஞானத்திலும் பெருமைப்பட்டு கொண்டார்கள். இந்த நிலையில் பிராட்டஸ்டாண்டுகளிடமிருந்து நம்முடைய கேள்விக்கு தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் திருப்திகரமாகவும் ஒரு பதிலை எதிர்ப்பார்ப்போமா? அனைத்து பதில்களும் திருப்திகரமல்ல என்று கண்டுக்கொண்டு எல்லா தரத்திலும் உயர்ந்த உதவிகளை பெற்றுகொண்டிருக்கிற இந்த கூட்டத்தினுடைய பன்னிரண்டில் ஒரு பங்கு வருகின்ற மக்களினுடைய பதில்களில், எல்லா காலங்களில் இருந்தும் ஞானத்தினுடைய தெளிவுகளும் உண்மையான சத்தியங்களும் எதிர்ப்பார்ப்போம். ஆன்னல் நண்பர்களே, நாம் என்ன பார்க்கப்போகிறோம் தெரியுமா? வெட்கத்துடன் நாங்கள் சொல்லுகிறோம் இதற்கு நேர் எதிராகத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

பிராட்டஸ்டாண்டுகளினுடைய பதிலில் நாம் கேள்விபடுகின்றது நம்முடைய எதிர்ப்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. கத்தோலிக்கருக்கும் ஜாதிகளுக்கும் தெய்வமில்லை என்று சொல்லுபவர்களுக்கும் ஒரே மாதிரியான கேலிகூத்துதான் இந்த பதில். இது ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா? இப்படி இருக்கலாமா? ஒரு நண்பருடைய சாசனைகள் குணத்திற்காகதான் பிராட்டஸ்டாண்டுகளின் பலவீனங்களை நாங்கள் வெளிப்படுத்தும் பொழுது நீங்கள் உங்களுடைய பொறுமையை இழந்துவிடக் கூடாது. யாருக்கும் வெறுப்போ கலக்கமோ உண்டாக்குவதற்கல்ல நாங்கள் இவ்வாறு கூறுவது. இந்த விஷயத்தைக் குறித்துள்ள பரிசோதனைகள் நம்முடைய நன்மைக்கு உதவுகின்றதும், உனண்மைகளை எடுத்து மக்கள் முன்னில், சத்தியத்தினுடைய திவ்வியக் கொடி உயர்வதற்கு ஆயத்தப்படுவதற்கும் உதவும் என்ற சிந்த்னையோடு தான். இதனுடைய பலன் நாமும் மற்ற அனைவரும் நமது சிருஷ்டி கர்த்தருடைய சுபாவங்கள், தீருமானங்கள், வரும் காலத்தில் மனிதவர்கத்தோடுள்ள அவருடைய கிறியைகள் இவைகளைக் குறித்துள்ள தெளிவான, ஆழமான அறிவுள்ளவராக மாற்ற வண்டும் என்பதும் தான்.

வேதனை உருவாக்குகின்ற இந்தப்பகுதி முழுவதும் மென்மையாக தொடவேண்டும். கட்டுகள் அவிழ்க்கபடுவதும் புண்ணுகளை சுத்தம் செய்வதும் வேதனை உண்டாக்குகின்றது தான். ஆனாலும் அது ஆரோக்கியமானது. ஆறிவும் சிந்தனை சக்தியுமுள்ளவர்கள் தான் நம்முடைய கத்தோலிக்க முற்பிதாக்கள். அவர்கள் பரிசீலித்துவந்த கத்தோலிக்க மத ஆசாரங்களில் உண்டான, வேத விபரீதங்களையும், மூட நம்மிக்கைகளையும் கண்டுபிடித்ததில் இருந்து பிராட்டஸ்டாண்டு என்ற ஒரு கூட்டத்தினர் (எதிர்க்கின்றவர்) என்ற நாமம் உண்டானது. அவர்கள் இவைகளை எதிர்த்தார்கள். ஆகையால் எதிர்க்கின்றவர் என்ற பொருளில் பிராட்டஸ்டாண்டு என்ற நாமம் உண்டானது. அவர் அவர்களுடைய எதிராளிகளோடு செய்ததோ எதிராளிகள் அவரோடு செய்ததோ முழுமையாய் நியாயப்படுத்துவதற்கு முடியாது.

பிராட்டஸ்டாண்டுகள் சுத்தீகரண இடத்தை மறுதலிக்கிறார்கள்:

பிராட்டஸ்டாண்டுகள் மறுதலிப்பதற்கு முக்கிய காரணம் சுத்தீகரண இடத்தைக் குறித்து வேதபுத்தகத்தில் எங்கும் ஒன்றும் சொல்லப்படவேயில்லை. நாம் மறந்து போகத்தக்க வகையில் அவ்வளவு அழகாக சுத்தீகரண இடத்தைக் குறித்துள்ள எங்கள் விசுவாச ஏடுகள் மொத்தமாக நாசம் பண்ணி தொலைவில் எறிந்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவெடுத்தார்கள். இப்போது மீதியானது சொர்கமும் நரகமும் மட்டும் தான்(அல்லது பரலோகமும் நரகமும்). ஒவ்வொரு மனிதர்களும் மரிக்கும் பொழுது இவைகளில் ஒன்றில் பிரவேசித்து நித்தியம் அங்கே கழிப்பார்கள் என்று இவர்கள் போதித்தார்கள். தங்களூக்கு நேரிடப் போகும் கஷ்டங்களை உணராதிருந்த இவர்கள் காரிய சுத்தி உள்ளவர்கள் தான், ஆனாலும் நாம் எதிர்ப்பார்த்தது போல உள்ள தீர்க்கதரிசனமோ, புத்திசாமர்த்தியமோ, ஒரு தெளிவான சிந்தனையோ இவர்களுக்கு இல்லாமல் போனது. சிலசமயம் தங்களுடைய துயரங்கள் கொஞ்சமாவது புரிந்திருக்கக்கூடும் என்று கருதுவது தான் சரி. ஆனால் நம்முடைய சிந்தனைகளில் இருந்து வித்தியாசமான ஒரு பார்வையோடு தான் இவர்களில் காரியங்களை ஆராய்ந்தது. அன்று பிராட்டஸ்டாண்டுகளுக்கிடையில் மிக பிரபலமாக இருந்தது கால்வின் நோக்ஸினுடைய சிந்தனைகள் அல்லது சித்தாந்தங்கள். இந்த சித்தாந்தங்களில், தாங்கள் தான் தெய்வத்தினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம் என்றும், பரலோகத்திற்கு சொந்தக்காரர்களாகிய சிறு மந்தை என்றும், மனிதராசியில் மீதியுள்ளவர்கள் நரக்த்திற்கு சென்று சேருவார்களென்றுமுள்ள விசுவாசத்துக்கு நேராக வழி நடத்தினார்கள்.

இப்போது வெளிச்சம் கூடுதலாக :

தெய்வமே, நானும் என் மனைவியும் என் மகனும் மருமகளும் வேறேயாரும் வேண்டாம் எங்கள் நாங்கு பேர்களை மட்டும் ஆசீர்வதியும் என்பது போல் இனிமேல் பிராட்டஸ்டாண்டுகளோ கத்தோலிக்கரோ ஜெபம் பண்ண மாட்டார்கள். கத்தோலிக்கர் ஆனாலும் சரி, பிராட்டஸ்டாண்டுகள் ஆனாலும் சரி இரு கூட்டத்தினரும் இருட்டின் யுகம் என்று நாம் சாதாரணமாக சொல்லுகின்ற காலத்தை திரும்பிப்பார்க்கும் பொழுது நம்முடைய முற்பிதாக்கள் புத்தியோடும் ஞான திருஷ்டியோடும் உக்தியோடும் சிந்திப்பதற்கு பாத்திராக்கிய தெய்வத்திற்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். முன் நிச்சயிக்கப்பட்ட உபதேசத்தின் படி வளர்ந்தவராகிய நாம், ஜாதிகள் உதறி தள்ளினது அவர்களுடைய நாசத்திற்கு தான் என்று சொல்லவில்லை. வெஸ்டுமினிஸ்டரில் நடந்த விசுவாச வரவேற்பு சம்மதிக்கின்றவர், மிஷனரி வேலைகள் மூலமாக மக்களுக்கிடையில் சுவிசேஷம் பரப்புவதில் இன்று அதிக நாட்டம் காட்டுகிறார்கள். நம்முடைய புத்தியுள்ள இதயமாய் இன்னும் தேவையானதுபோல பொருத்தப்படவேயில்லை ஆனாலும் நம்முடைய இதயம் கூடுதலான சத்தியமும் சிரேஷ்ட்டவுமாயிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளம். இப்பொழுது நாம் ஆழ்ந்த புத்தியுள்ள உபதேசங்களில் கவனம் செலுத்துவதும் அவை நேரே உள்ளவைகள் என்று நினைப்பதற்கும் முயற்சிக்கிறோம்.

சித்தாந்தமான பிராட்டஸ்டாண்டுகளின் உபதேசம் வேத புத்தகத்தோடும் கத்தோலிக்க விசுவாசத்தோடும் சேர்ந்து பரலோகம் பரிபூரணத்தின் இடமென்றும் அங்கே பிரவேசிக்கின்றவர்களுக்கு எந்தவித மாற்றமும் உண்டாக கூடாது, ஆதலால் பரலோக வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக எல்லாவித பரிசோதனைகளும், சுத்தீகரணமும், அலங்காரங்களும் செய்து முடித்திருக்க வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஒரு வார்த்தையில் சொன்னால் இப்போது இயேசுவினுடைய அடிசுவடுகளில் நடக்கின்ற இதய சுத்தியுள்ளவரும் வெற்றிபெற்றவருமான தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் தான் அங்கே பிரவேசிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒன்று சேருகிறோம். ஆனால் மனித வர்கத்தின் மீதியுள்ளவர்களுடைய நிலை என்ன? ஆம் அங்கே தான் கஷ்ட்டமாய் இருக்கிறது. தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டம் போக, மீதமுள்ள அனைவரும் நித்திய தண்டனைக்கு விட்டு கொடுப்பதற்கு நமது விசுவாச பிரமாணங்கள் அங்கீகரிக்கின்ற வாதம் அது தான் என்றாலும் நமது இதயம் அதற்கு தயார் இல்லை. இன்றைய மனிதர்களில் முக்கால் பங்கு தெய்வத்தையும், இரட்சிப்பின் காரியங்களைக் குறித்தும் ஒருபோதும் கேள்விப்படாத ஜாதிகள் என்று சொல்லிக் கொள்ள நமது இதயம் அவைகளை எதிர்க்கிறது.

நல்ல மக்கள் பயப்படுகிர்ரார்கள் :

நம்முடைய விசுவாச பிரமாணங்கள் நம்மை பயப்பட வைக்கிறது. எப்படியென்றால் இந்த பாக்கியமில்லாத சிருஷ்ட்டிகள் நித்திய நாசத்திற்கு செல்கிறது என்று விசுவாசிக்க நம்முடைய மனம் மறுக்கிறது. பரலோக வாசிகளில் முக்கால் பங்கு யாதொரு வகையிலும் மறுபிறப்பு இல்லை என்று விசுவாசிக்கின்றது உண்மையாகவும் வேத வசனத்திற்கு மட்டுமல்ல புத்திக்கும் யுக்திக்கும் எதிரானது. சுத்தீகரண இடத்தைக் குறித்த உபதேசதை புறம் தள்ளி அந்த விசுவாச பிரமாணத்தினுடைய மீதியுள்ள காரியங்களை வைத்து ஆசரிப்பதிலும் நம்முடைய மூப்பர்கள் நம்மை விடவும் காரியங்கள் வசமாகி விட்டார்கள். சுத்தீகரண இடம் திருவசனத்திற்கு எதிராயிருக்கிறது என்று நாம் மறுதலிப்பதினால் உலகம் முழுவதுமாக உள்ள நித்திய தண்டனை வேதத்திற்கு விபரீதமென்ற நிலையில் நாம் எதிப்பு தெரிவிக்க வேண்டாமா? மேலும் கிறிஸ்து முகாந்திரம் பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்ப்டுவார்கள், சத்தியத்தைக் குறித்துள்ள ஞானத்திலும் அறிவிலும் தெய்வத்தோடு நிரப்பும் கிறிஸ்து முகாந்திரம் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்வதற்குள்ள ஒரு வாய்ப்பு கொண்டும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று வேத புத்தகம் பிரகடனம் செய்கின்ற நிலைக்கு அது அவசியமாயிருக்கிறது. நித்திய தண்டனையுடைய அறிவின்மையும் இங்கே ஊன்றி சொல்ல வேண்டியது அவசியமாக தான் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். எப்படியானாலும் இந்த விஷயத்தைக் குறித்துள்ள பிராட்டஸ்டாண்டு நம்பிக்கைகளை நாங்கள் இங்கே வெளியிட விரும்புகிறோம்.

1. தெய்வத்தினுடைய ஞான சக்திகள் மனிதனுடைய தாழ்ச்சியை முன்னரே கண்டறிந்து மனித வர்கத்தினுடைய தண்டனைக்காக நரகம் என்கின்ற ஒரு மகாதாவளம் (மகா ஸ்தலம்) உண்டாக்கி அக்னி தண்டனைக்கு பாத்திரராகாத துர் ஆத்துமாக்களை போட்டுக் கொண்டு தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டம் அல்லாத மற்ற மனிதர்களுகாக நரகம் என்ற இடம் உண்டாக்கினார் என்று கால்வின் சொல்லுகிறார். இந்த சிந்தனையில் அன்பும் நீதியும் புறம் தள்ளப்பட்டிருக்கிறது.

2. ஒரு வேளை முக்கால் பங்கு மக்களும் இன்றைக்கு அங்கீகரித்திருக்கின்ற அர்மீனியன் தத்துவத்தின் படியும் மற்றும் பிராட்டஸ்டாண்டு விசுவாசத்தின் படியும் ஞான சக்திகளை மாற்றி நிறுத்தி, தெய்வ அன்பு, நீதி இவைகளை உலக சிருஷ்டிகள் நடத்தியும் தண்டனைகளை உண்டாக்கியும் செயல் பட்டார்கள். அதனால் சிருஷ்டிகளினிடத்தில் நீதியுடனும், அன்புடனும் பழகுவதற்குள்ள முயற்சியில் அவசியமாக உதவி கொடுப்பதற்கு முடியாமல் தெய்வம் குழம்பிப் போயிருந்தார்.

நண்பர்களே, இந்த விஷயம் சம்பந்தமான ஆராய்சியில், எங்களுக்குக் கிடைத்த கஷ்டங்கள் முழுவதும் தெய்வ வசனத்தை ஆராய்ந்து பார்க்காமல் மனிதர்களுடைய வாய்மொழிகளை பார்த்து போனதில் மட்டும் தான்.

சத்தியம் கற்பனை கதைகளைக் காட்டிலும் நம்ப முடியாததாக தான் இருக்கிறது:

தெய்வம் நம்மை போலல்ல, உன்னதமானவர். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் (மத்தேயு:5:44) என்றும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனம் கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு பானங்கொடு (ரோமர்:12:20) என்றும் கர்த்தர் சொல்லியிருக்கிறார். தெய்வம் நித்தியம் நித்தியமாய் தம்முடைய சத்துருக்களை தண்டிப்பார் என்று நம்புகிறது எவ்வளவு விசித்திரமானது. அதுமட்டுமல்ல, அவருடைய சத்துருக்கள் அல்லாத இப்பொழுது விசுவாசிகளாக மாறுவதற்கு முடியாதவர்களையும் தெரியாதவர்களையும் அறிவீனமானவரையும் அவர் தண்டிப்பார் என்று சொல்லுகிறார். சிந்தனை குழப்படியில் இருந்தும் அடுக்கும் கிரமமும் கண்டு பிடிப்பதற்கும் நம்முடைய வர்கத்தோடுள்ள அவருடைய நடத்துதலும் உண்மையான மதிப்பு மீட்டு எடுப்பதற்கும் ஒரே ஒரு தீர்க்கமான தேடலில் இருந்து தான் முடியும். அதுதான் நம்முடைய வேத புத்தகத்தில் வெளிப்ப்டுத்தியிருக்கின்ற படி உள்ள சத்தியத்தை தேடுதல் ஆராய்ச்சி தொடரும் ...

(தொடரும்...)


Thursday, November 17, 2011

கத்தோலிக்க மதத்தினுடைய பதில் :

ஜாதிகளை விட்டுவிட்டு ஞானிகளும் உலக மக்களில் கால் பங்கு வசிக்கின்றவருமாகிய கிறிஸ்துவர்களிடம் நாங்கள் இந்த கேள்வி கேட்கிறோம். கிறிஸ்தவரே உங்கள் பதில் என்ன?

பதில் இவ்வாறு தான்:

எங்களிடம் வித்தியாசமான பதில்கள் உண்டு. எங்களில் மூன்றில் இரண்டு பங்கு கத்தோலிக்க விசுவாசமுள்ளவர்கள். ஒரு பங்கு பிரட்டஸ்டன்ட் (Protestant) விசுவாசமுள்ளவர்களுமாயிருக்கிறோம். பழமையானதும் அதிக மக்கள் தொகையுள்ளதுமானதால் முன் வரிசையில் கத்தோலிக்க பிரிவினர் நிற்கிறார்கள். யவன சபை மற்றும் ரோமன் சபைக்குட்பட்ட கத்தோலிக்க பிரிவினுடைய பதிலை நாம் பார்ப்போம். மரித்தவர் எங்கே? எங்கின்ற விஷயத்தைக்குறித்து, தெய்வம் தந்தது என்று உரிமை பாரட்டுகின்ற திவ்விய வெளிப்பாட்டின் அடிப்படையில் நீங்கள் நடத்திய கடுமையான உழைப்பிற்கும் படிப்பறிவினைக்கும் கிடைத்த கனிகளும், உங்கள் மூத்த சிந்தனையாளர்களையும் வேத சாஸ்த்திர ஞானிகளுடைய யோசனைகளையும், எங்கள் கத்தோலிக்க நண்பர்களே! எங்களுக்குத் தாருங்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் யாதொரு முன் விதியுமில்லாமல் பொறுமையோடும் கவனத்தோடும் கேட்கிறோம்.

நமது கத்தோலிக்க சகோதரர்கள் இவ்வாறு பதில் தருகிறார்கள்:

உங்கள் கேள்விக்கு தக்க பதில் நாங்கள் தருகிறோம். திவ்விய வெளிப்படுத்துதலுடைய எல்லா தரிசன திசைகளிலும் நாங்கள் இந்த விஷயத்தைக் குறித்துதான் பரிசோதனைகள் செய்தோம். ஒரு மனிதன் மரிக்கும்பொழுது மூன்று இடங்களில் ஒன்றில் செல்கிறான் என்பதுதான் எங்களூடைய விசுவாசமும் உபதேசமும். முதலாவதாக பரிசுத்தர். இவர்களுடைய தொகை மிகவும் குறைவு. இவர்கள் மரித்தவுடன் தெய்வ சன்னதியில் பரலோகத்திற்கு செல்கிறார்கள். தன் சிலுவையை சுமந்துக்கொண்டு எனக்கு பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்கமாட்டான் (லூக்கா:14:27) என்று கர்த்தராகிய இயேசு சொல்லியிருப்பது இவர்களைக்குறித்து தான். சத்தியத்தோடும், விசுவாசத்தோடும் சிலுவை சுமந்தவர்கள் தான் இந்த சிறிய ஆட்டின் கூட்டம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம். இவர்களைக் குறித்து ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் (மத்தேயு:7:14) என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இந்த பரிசுத்தவான்களுடைய கூட்டத்தில் எங்களுடைய பாஸ்டரோ, பிஷப்போ, கர்தினரோ, போப்ஆண்டவரோ, யாரும் இக்கூட்டத்தில் இல்லை. காரணம் இவர்களில் யாராவது மரிக்கும்பொழுது அவர்களுடைய ஆத்துமாக்களுடைய சாந்திக்காக திவ்விய பலிகள் சமர்ப்பிக்கிறார்கள். இது சபையினுடைய ஒரு சட்டம் (நியமம்) என்று உங்களுக்குத் தெரியும். பரலோகம் தான் என்று விசுவாசிக்கின்ற யாருக்காகவும் நாம் திவ்விய பூஜைகள் சமர்பிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அங்கே அனைத்து ஆத்துமாவிற்கும் சாந்திஉண்டு. நித்திய நரகம் தான் என்று விசுவாசிக்கின்றவர்களுக்காவும் நாம் திவ்விய பூஜைகள் சமர்பிக்கத்தேவையில்லை. எப்படியானலும் அனேகம் பேர்கள் நித்திய நரகத்திற்கு செல்லமாட்டார்கள் என்ற சத்தியத்தை நாங்கள் இங்கே கூறிக்கொள்கிறோம். மனம் திருந்தாத மதவிரோதிகள் கத்தோலிக்க சட்டங்களை குறித்து முழு ஞானமுண்டு என்றாலும் அவைகளை மனபூர்வமாக எதிர்த்தவர் மட்டும் தான் பயங்கரமும் வேதனையானதுமான இந்த நிலையை அடைவார்கள் என்று தான் நாங்கள் போதிக்கிறோம்.

அனேக இலட்சங்கள் சுத்தீகரண இடத்திற்கு:

எங்களுடைய சித்தாந்தத்தின் படி மரித்தவர் மொத்தத்தில் அந்த நிமிடத்தில் சுத்தீகரண இடத்துக்கு செல்கிறார்கள். இந்த பெயரில் இருந்து புரிகிறது போல விரதங்கள் இருப்பதாலும் குற்ற அறிக்கையிடுதலும் கஷ்டங்களும் உள்ள இடம் தான் என்றாலும் ஆசைக்கு இடமில்லாமல் இல்லை. தண்டனைக்கு ஒருவனுடைய யோக்கியதையும் அவனுடைய காரியங்களின் அடிப்படையில் இங்கேயுள்ள தண்டனைக்காலம் நூறாண்டுகளோ, அனேகாயிரம் ஆண்டுகளோ ஆகலாம். அதிகம் அறிய வேண்டுமானால் ஒரு பிரசித்திப்பெற்ற கத்தோலிக்கனும் கவி பண்டிதனுமான டாண்டே என்பவருடைய எழுத்துக்களை நாம் பார்க்கலாம். டாண்டே ஒரு உத்தம கத்தோலிக்கன். சபையினுடைய முழு பதவிகளுடன் ஒரு ஆசிரமத்தில் மரணமடைந்தார். இதனைக் குறித்த எங்களுடைய சிந்தனை படி டாண்டே தன்னுடைய இன்போர்ணோ (நரகம்) முதலான கவிதைகளில் சுத்தீகரண இடத்திலுள்ள தண்டனைகளுடைய நல்ல படங்கள் வரைந்திருக்கிறார். இந்த கத்தோலிக்க காவிய புத்தகங்களுடைய பதிப்பு உங்களுக்கு எந்த ஒரு நூலகத்திலும் கிடைக்கும்.

டோரே என்ற கலைஞர் பிரசித்திபெற்ற ஒரு கத்தோலிக்கனாயிருந்தார். இவர் டாண்டேயுடைய காவியத்தை மிக தெளிவாகவும் அழகாகவும் படமாக வரைந்திருக்கிறார். இன்போர்ணோ காவியத்தில் வர்ணித்திருக்கிறதுபோல நரக வேதனைகளை இவரது ஓவியங்களில் விவரித்திருக்கிறார். அதன் படி உயரமான மலைகளிலிருந்து வெட்டி கொதிக்கின்ற தண்ணீருக்குள் தள்ளி விடுகின்றது வரையிலும் பிசாசுகள் பின் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. சிலரை அவர்கள் அக்னிசூலங்கள் கொண்டு அடிக்கிறார்கள். வேறே சிலரை தலைகீழாய் நிறுத்துகிறார்கள். மற்ற பலரை அவருடைய பாதங்களை குழிக்குள்ளிட்டு சுடுகிறார்கள். சிலருக்கு பாம்பு கடி கிடைக்கிறது வேறு சிலர் உரைந்து மறைந்து போகிறார்கள். இப்படியாக இந்த சித்திரம் தொடர்ந்து கொண்டே போகிறது. டாண்டேவினுடைய இன்போர்ணோ காவியத்தை வாசிப்பதற்கு நாங்கள் போதிப்பது மரித்தவர் எங்கே? என்ற உங்களுடைய கேள்விக்கு தக்க பதிலானதால் கத்தோலிக்கருடைய விசுவாசம் அதில் தெளிவாக இருப்பதினால் தான்.

சுத்தீகரண இடத்தில் தான் முக்கால் பங்கு மக்கள் கூட்டம். ஏன் என்றால் அறிவின்மை இரட்சை அடைவதற்கு காரணமாகவோ பரலோக பதவிக்கு யோக்கியமாகவோ செய்ய முடியாது. பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு முன்னதாக அதற்கு பாத்திரமான எல்லோரும் சாத்தியமாகாத ஒரு சம்பிரதாயத்தில் சேர்ந்தவரும் ஆயத்தப்பட்டவருமாயிருக்கவேண்டும். பிராட்டஸ்டான்டு வகுப்பிற்குட்பட்ட இலட்சங்கள் அங்கே தான் உள்ளது. கத்தோலிக்க சபை மூலமாக அல்லாமல் அவர்களுக்கு பரலோக பிரவேசம் கிடைக்காது. அவர்களை கத்தோலிக்க மதம் புறக்கணித்தது, நாங்கள் பிறந்ததும் பரிசீலித்ததுமான விசுவாசத்தினுடைய வரவேற்பு மூலமாகயால், அவர்களை நித்திய நரகத்திற்கு பாத்திரராக எண்ணுவதற்கு தெய்வத்திற்கு முடியாது.

கத்தோலிக்கரும், கிட்டத்தட்ட அனைவரும் சுத்தீகரண இடத்திற்கு போகிறார்கள். சபையுடைய உதவிகரம், பரிசுத்த தண்ணீர், பாவங்கள் அறிக்கையிடுதல், திவ்விய பூஜைகள், புண்ணிய ஜலம், சுத்தமாக்கப்பட்ட சுடுகாடுகள் இவைகள் அனைத்தும் இருந்தும் அவையெல்லாம் பயனற்று போகுமாறு குணத்தில் தூய்மை, இவர்கள் சுத்தீகரண இடத்திலுள்ள சோக நிகழ்ச்சிகள் வழியாக இதயம் பரலோகத்துக்கு உகந்ததாக ஆயத்தப்படும் வரை அங்கே இருந்து புறம் தள்ளப்படுவார்கள். ஆனாலும் கத்தோலிக்கனுக்கு அவ்வளவு காலம் சுத்தீகரண இடத்தில் வாழவேண்டியதில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.

துக்ககரமான ஒரு எதிர்பார்ப்பு:

தங்களுடைய நிலைபாடுகளைக் குறித்துள்ள இந்த அறிவிப்பிற்கு (இந்த சித்தாந்தத்துக்கு) நாம் பெருமை பாராட்டலாம். அவர் சொல்லுகின்ற சுத்தீகரண இடம் எங்கே? என்றோ அல்லது அதனுடைய விவரங்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்றோ நாங்கள் கேட்கவில்லை. காரணம் அந்த மாதிரியான கேள்விகளால் அவர்கள் யாருக்கும் மனவருத்தம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தைக் குறித்து தெளிவான, அறிவு பூர்வமான கருத்தை அறிவதற்கு நாங்கள் விரும்புகிறோம். அவர்களுடைய இந்த பதில் நாங்கள் எதிர்பார்த்த படி, வேதத்திற்குட்பட்டதும் தெளிவானதும் ஞானமுள்ளதுமல்ல என்று சொல்வதில் நாங்கள் வருந்துகிறோம். அப்போஸ்தலர் சொல்லுகின்ற விதத்தில் முதல் பாவம் நிமித்தம் நாம் இப்போதே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் காலத்துக்குள் இந்த வாழ்க்கையும் துக்கமானது தான் என்ற சிந்தையும் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுள்ள சோதனைகள் தீரும் பொழுது, நித்தியம் போகட்டும், கொஞ்சம் நூற்றாண்டு வரைதான் என்கின்ற டாண்டேவினுடைய சித்திரங்கள் போலுள்ள பயங்கரமான காரியங்களுக்கு பாத்திரராய்த்தீருமோ என்கின்ற பயம் ஒவ்வொருத்தரையும் வாட்டி வதைக்கிறது. இவ்வாறு துக்கமான நூற்றாண்டுகள் சுத்தீகரணமும் தெய்வ சன்னிதிக்கும் பரலோக மகிமைக்கும் பாத்திரராக மாற்றும் என்றிருந்தாலும் நம் எல்லோருக்கும் துக்கமும் மகிழ்ச்சியின்மையும் உண்டாக்குகிறது.

எங்களுடைய கேள்விக்கு கத்தோலிக்கர் கொடுத்திருக்கின்ற பதில், மற்றவர்களிலிருந்தும் மேன்மையில்லை என்று சொல்லுகின்றபொழுது வேத பண்டிதர்களுக்கு புதுமையாய் தோன்றும், ஆனாலும் அதுதான் உண்மை எங்கள் இதயமோ, மனதோ திருப்தியடையவில்லை. இன்னும் திருப்திகரமான ஒரு பதிலை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியதாய் இருக்கிறது. மேலும் திருப்திகரமான ஒரு பதிலை தேடுவது தான் சரியாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

தொடரும் ....

Wednesday, November 9, 2011

மரித்தவர் எங்கே?

பரிசுத்தவான்களும் பரிசுத்தமில்லாதவரும் ஆடம்பரமானவர்களும் ஆடம்பரமில்லாதவர்களும் தனவான்களும் தரித்திரர்களும் ஆகிய நம்முடைய சொந்தகாரர்களும் நண்பர்களும் அயல் வீட்டாரும் ஆகிய எல்லோரும் மரித்திருக்கிறார்கள், மரித்துப்போன இவர்கள் எங்கே?

“சகோதரர்களே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களிடையே தைரியமாய்ப் பேசுவதற்கு இடம் கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. “தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. (அப்போ:2:29,34).

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷ குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் :3:13)

பரிசுத்தவானோ, பரிசுத்தமற்றவனோ, ஆடம்பரமானவனோ ஆடம்பரமில்லாதவனோ நம்முடைய சொந்தகாரரும் நண்பர்களும் எங்கே? இந்த கேள்வியினுடைய பதிலுக்கு நம்முடைய வாழ்க்கையோடு விதி கற்பிக்கின்ற ஒரு பாடம் உண்டு. அது நம்முடைய வேத சாஸ்திரங்களையும் வாழ்க்கை வரலாறுகளையும் பாதிக்கிறது. சரியான பதிலும் நல்ல தெளிவும் சக்தியும் நமக்கு தருகிறது. நல்ல அறிவின் ஆத்துமா நம்மில் உண்டாவதற்கு உதவியாய் இருக்கும். இந்த விஷயம் எனக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்று யாராவது சொன்னால் அவர் புத்தியில்லாதவரும் சிந்தனை சக்தியில்லாதவரும் என்று சுயமாக சொல்லிக்கொள்கிறார்கள். கொஞ்சம் காலத்துக்கு மட்டும் நம்மை நடத்துகின்ற, உணவு, உடை, தனம், அரசியல் போன்ற இந்த வாழ்நாளில் சாதாரண விஷங்கள் போல் கணக்கிலெடுக்கவேண்டியதும் படிபதற்கும் என்றால் நாமும் நம்முடைய அண்டைவீட்டாரும் மொத்தத்தில் மனுஷ ராசியின் நித்தியமான வருங்காலம் எவ்வளவு கவனிக்கப்படவேண்டியதாயிருக்கிறது.

தெய்வம் இல்லை என்று சொல்லுகிறவர்களுடைய பதில் என்ன?

சொந்தமாகவும் சுதந்திரமாகவும் சிந்திப்பதில் பெருமை அடைகின்றவரும் தெய்வம் இல்லை என்று வாதிடுகின்றவர்களுமாகிய எங்களுடை நண்பர்களாகிய உங்களிடம் ஒரு கேள்வி, மரித்தவர் எங்கே? என்ற எங்களுடைய தேடுதலுக்கு உங்கள் பதில் என்ன? உங்களுடைய பதில் இவ்வாறு தான் இருக்கும், எங்களுக்கு தெரியாது. வருங்கால வாழ்க்கையை நாங்கள் விசுவாசிக்கிறொம். ஆனால் அதற்கு ஒரு தெளிவும் இல்லை. தெளிவுகள் ஒன்றும் இல்லாததினால், மிருகங்களைப்போல மனிதர்களும் மரிக்கிறார்கள். பரிசுத்தவான்களுடைய பாக்கியங்களைக்குறித்துள்ள உங்கள் நம்பிக்கைகளை அவமதித்தாலும் எங்களுடைய இந்த அறிவில் ஒட்டுமொத்த மனித குலமும் ஆறுதல் அடைவார்கள். காரணம் முக்கால் பங்கு மனிதர்களுடைய நம்பிக்கையின் படி, வேதனையில் வாழ்வதைக்காட்டிலும் மிருகங்களைப்போல இறந்துபோவதுதான் நல்லது.

கீழ்தரமான இந்த பதிலுக்கு நாங்கள் எங்கள் நண்பர்களிடம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு வாழ்க்கை உண்டு என்றோ உண்டாயிருக்க வேண்டுமென்றோ, வாஞ்சிக்கின்ற எங்கள் இதயத்திற்கோ, புத்திக்கோ இந்த பதில் போதுமானதல்ல. திவ்வியதரிசனத்தில் மனிதன் உன்னதமானவன் என்று சொல்ல தக்க வண்ணமாக சிருஷ்டித்த கர்த்தர் அவனுடைய தாலந்துகளில் மிருகத்தை காட்டிலும் ஒரு உயர்ந்த பதவியில் படைத்திருக்கிறார் என்று பறைசாற்றுகின்ற நம்முடைய உள் மனதிற்கோ இந்த பதில் திருப்தி தரவேயில்லை. அதுமட்டுமல்ல இந்த சிறுவாழ்நாளில் அனுபவிக்கும் வேதனைகளும் கஷ்டங்களும் அனுபவங்களும் படிப்பினைகளும் பிரயோஜனப்படுவதற்கு ஒரு சந்தர்பம் இல்லாமல் போனால் இதெல்லாம் தேவையில்லாததும் பரிதவிக்க கூடியதாயிருக்கும். நம்முடைய கேள்விக்கு திருப்திகரமான ஒரு பதில் கண்டுப்பிடிப்பதற்கோ நாம் கூடுதலாக ஆராய்ந்து பார்க்க வேண்டியதாயிருக்கிறது.

ஜாதிகளுடைய பதில்:

உலகத்தில் முக்கால் பாகம் ஜனங்களும் ஜாதிகளானபடியினால் மக்கள் தொகையைப்பார்க்கும்பொழுது மரித்தவர் எங்கே? என்ற கேள்விக்கு அவர் தருகின்ற பதில் தான் அடுத்ததாக நாம் ஆராய்ந்துப்பார்க்கவேண்டியது. அவர் இரண்டு சாதாரணமான பதில்கள் தான் தந்தார். மறுபிறவியில் விசுவாசிக்கின்றவர்கள் தான் அவரில் முக்கியமானவர்கள். அவர் இவ்வாறு பதில் தருககிறார், ஒருவர் மரிக்கும்பொழுது அந்த ஆள் மரிக்கிறதில்லை. ஒரு மாற்றம் மட்டும் உண்டாகின்றது இந்த ஆயுசில் உள்ள ஜீவிதத்திற்கு வாழ்க்கை பிரகாரம் தான் அந்த ஆளுடைய வருங்காலமும் அந்த ஆளுடைய வாழ்க்கையின் பிரகாரம் உயர்ந்ததோ தாழ்ந்ததோ ஆன ஒரு வாழ்க்கை கிடைக்கும். சில சமயம் பூனையாகவும் நாயாகவும் எலியாகவும் யானையாகவும் வரலாம். முன்னே நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் இப்பொழுதுள்ள வாழ்க்கை புத்திசாலித்தனமாக வாழ்ந்தால் மேதைகளாகவும், ஞானிகளாகவும் பிறகு பிறப்பார்கள் என்றும் கிடைத்த வாழ்க்கையை துஷ்டத்தனமாக வாழ்ந்தால் திரும்பவும் தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு ஜீவனாக மாறுமென்று என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது யானையாகவும் ஒரு புழுவாகவும் அல்லது மற்ற எந்த ஒரு மிருகமாகவும் வரலாம். அதனடிபடையில்தான் நாங்கள் தாழ்ந்த நிலையிலுள்ள மிருகங்களோடும் பிராணிகளோடும் அன்பு காட்டுகின்றதும் எந்தவித மாமிச ஆகாரங்கள் நாங்கள் சாப்பிடாத்ததும். நாம் ஒரு புழுவை காலால் மிதித்து சாகடித்தால், நம்முடைய மரணத்திற்கு பிறகு இதைபோலுள்ள பிராணியாக பிறக்க கூடும்.

(2) ஜாதிகளில் ஒரு பாகம் ஜனங்கள் அதாவது நன்மை செய்கின்றவர்களுக்கு, நல்ல இடங்களும் தீயவர்களுக்கு பல தரத்திலுள்ள தண்டனை கிடைக்கின்ற நரகமும் கிடைக்குமென்று நாங்கள் நம்புகிறோம், மனிதர்கள் மரிக்கும் பொழுது அவர்களுடைய முந்தைய நிலைமையைக்காட்டிலும் மிகவும் தாழ்ந்தவராக மாறும் என்றும் வைதரணி எங்கின்ற பரலோக நதி கடக்கும் பொழுது நல்லவர்களோ அல்லது தீயவர்களோ இவர்களுடைய வாழ்க்கையோடு சேரும் என்றும் ஆசீர்வாதத்திற்கும் தண்டனைக்கும் வித்தியாசமான படிகள் உண்டு என்றும் அவர் உபதேசிக்கிறார்கள் இந்த சிந்தனை அல்லது இந்த அறிவு, உங்களுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? என்று நாங்கள் கேட்கிறோம். பதில், இவ்வாறு தான். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த விசுவாசத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம். இதனுடைய உற்பத்தியைக்குறித்து எங்களுக்கு தெரியாது. எங்களுடைய முற்பிதாக்கள் இவ்வாறு எங்களுக்கு உபதேசித்து வழி நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் இதை விசுவாசித்து வாழ்கிறோம்.

ஆனால் இந்த பதில் நம்முடைய புத்திக்கோ மனதிற்கோ சேர்ந்ததல்ல. பொய்யான உபதேசங்களும் வழிந்டத்துதலும் நம்முடைய விசுவாசமல்ல. நாம் பந்தம் வைத்திருக்கின்ற கர்த்தராகிய தெய்வத்தினுடைய திவ்விய வெளிப்பாட்டை நாம் தேடவேண்டியதாயிருக்கிறது.

தொடரும்...

Wednesday, September 21, 2011

தெய்வம் ஏகரோ? திரியேகரோ? - கடைசிப் பகுதி

பிதா குமார பரிசுத்தாவி மூவரும் சேர்ந்து ஒரு தெய்வம் என்ற வாதத்திற்கு சாதகமாயிருக்கின்ற ஒரு வாக்கியமோ திரித்துவம் என்ற சொல்லுக்கு ஒரு வார்த்தையோ வேதபுத்தகத்திலில்லை. பிதாவினுடைய சர்வாதிகாரத்தை புறம் தள்ளுகிறதாகவோ அல்லது குமாரன் தான் பிதா என்று அறிவிக்கின்றதாகவோ உள்ள ஒரு புள்ளியோ ஒரு கமாவோ வேதபுத்தகத்திலில்லை.

கணித சாஸ்த்திரமனுசரித்து திரித்துவம் என்றால் 3 x 1 = 3, 1 = 3, 3 = 1 என்று வருகிறது. திரித்துவ சித்தாந்தத்தில் இருந்து உருவெடுத்த நிரூபணங்கள் பிதாவைப்போல் வயதுள்ள குமாரன். தெய்வத்தினுடைய ஒரு பாகம் மரித்துப்போனது, தெய்வத்தினுடைய ஒரு பாகம் தெய்வத்தோடு ஜெபிப்பது, பரீட்சைக்குட்பட்டது. பாடுகள் அனுபவித்து, கொஞ்ச நாளில் மரணமடைந்தது. ஒரு குமாரன் சொந்த பிதாவிற்கு உயிர் கொடுத்து, திரும்பவும் தெய்வமனிதன் என்ற ஒரு விசேஷப்பட்ட ஆன்மாவாயிருக்கின்ற தெய்வத்திற்கு (யோவா :4:24) பரிசுத்தாவி எங்கின்ற இரண்டாவது ஆத்தும ஜீவியுண்டு. பிதா குமார பரிசுத்தாவி ஒரு தெய்வம் ஆனாலும் மூன்று தெய்வங்கள்.

பொருளில்லாததும் துர்வியாக்கியானம் செய்ததும், பொய்யானதுமான திரித்துவ சித்தாந்தம் வார்த்தைகளுக்கும் மனதிற்கும் விஷயமாகதது. அது மர்ம பிரதானமானதினாலும் கேள்வி கேட்காமல் கண் மூடி விசுவாசிக்க வேண்டுமென்று இக்கூட்டத்தினர் சொல்லுகிறார்கள். ஆனால் வேதபுத்தகம் மர்மம் என்று சொல்லுவது இப்போது மறைந்திருக்கிறதும் அந்தந்த நேரத்தில் நிச்சயித்திருக்கின்ற ஆளுமைகளாக வெளிப்படுத்தி கொடுக்கின்றதுமான ரகசியங்களைக் குறித்துதான்.

திரித்துவ உபதேசம் கிறிஸ்தவ மதத்தில் சாத்தான் ஏன் கொண்டுவந்தான்?

சாத்தானுடைய ஏழு வித கெட்ட இலட்ச்சியங்களை சாதிப்பதற்காக இந்த திரித்துவத்தை கிறிஸ்தவ மதத்தில் நுழைத்தான்.

அவைகள்:

1) யெகோவாவினுடைய மகிமையை குறைத்து காட்டுவதற்காகவும், அவருக்கு கிடைக்க வேண்டிய உன்னதமான பதவியிலும், அன்பிலும் மாயம் சேர்ப்பதற்காக.

2) பிதாவும் இயேசுவும் ஒன்று தான் என்ற கொள்கை முகாந்திரம் பிதா பக்தனும் எளிமையுள்ளவருமான குமாரனுக்கு துக்கமும் அவமானமும் வருவதற்காக.

3) புத்தியீனமும் மதியற்றதும் என்று காட்டி தெய்வ நிச்சயத்தைக்குறித்து நம்மை இருட்டில் தள்ளுவதற்காக.

4) வேத புத்தகம் முறன்பாடுள்ளதும் பொய்களும் நிறைந்த ஒரு விஷப்புத்தகம் என்று காட்டுவதற்காக.

5) விவேகத்தோடும் ஞானத்தோடும் முழு மனதோடும் தெய்வத்தை ஆராதிப்பதற்கும் நினைப்பதற்கும் முடியாத விதத்தில் தெய்வ ஜனங்களுக்கு சிந்தனை குழப்பங்களை கொடுத்து இவர்களுடைய மனதினை நிர்விசாரமாக்குவதற்காக.

6) இந்த விசுவாசத்தில் அடிமைகளானவர்களை மதபுரோகித மேலாதிக்கத்தில் சீக்கிரமாய் நம்ப வைப்பதற்காக.

7) வேதபுத்தகம், இப்படிபட்ட ஒரு பெரும் தவற்றையே போதிக்கின்றது என்று விபரீதமாக சிந்திப்பதினால் சிந்தான சக்தியுள்ளவர்களுக்கிடையில் விசுவாசமற்றவர்கள் பிறந்துவிடுவதற்கு வழி வகுத்து விடுவதற்காக.

முடிவுரை:

அண்டசராசரங்களுடைய மூலகாரணம் ஆதி அந்தமில்லாததும் சுயமாகவே இயங்குகின்றதும் தான் என்று யுக்தி போதகம் நமக்கு போதிக்கின்றது. ஏகமே வாதைத்தியம் பிரம்மா என்கின்ற உபநிடதம் இதைத்தான் போதிக்கின்றது. உலக பிதாவான அந்த பராசக்தி தான் தெய்வம். மனிதர்களுக்கு சாபமோட்சம் என்கின்ற ஒரு பெரிய வேலைக்காக அவர் சொந்த குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். பிதாவிற்கும், குமாரனுக்கும் உள்ள இந்த பெரும் ஞானம் தான் நித்திய ஜீவனுக்கு அஸ்திபாரமான சத்தியம். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன், (யோவான் :17:3) என்ற தெய்வ வசனம் இதற்கு சாட்சியாக நிற்கின்றது. குருவாகிய இயேசுவில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை வளைத்து ஒடிக்காமலும், காற்றில் பறக்கவிடாமலும் இருக்க வேண்டும் அல்லாமல் திரித்துவ வார்த்தை கொண்டு வருகின்றது அறிவின்மை தான்.

மற்ற மத புத்தகங்களைப் பார்க்கின்றப் பொழுது வேதபுத்தகத்திற்குள்ள மகிமை ஏறுகின்ற இந்த ஏக தெய்வ சித்தாந்தத்தை கரி பூசி காட்டுவதற்கு சாத்தான் மிக தந்திரமாக கொண்டுவந்தது தான் சாதாரண புத்திக்கு எட்டாத திரியேக தெய்வ விசுவாசம். படித்தவரும் புத்திசாலிகளுமான சபை மூப்பர்களூம் இந்த விஷயத்தில் அறியாமல் பிசாசினுடைய ஆயுதங்களாக மாறியிருக்கிறார்கள். எளிமையான வேத சத்தியங்களை வெறுத்து யெவனமுனிமார்களுடைய அடிசுவடு பின்பற்றி தத்துவ ஞானமெங்கின்ற பொய்யால் கட்டி உண்டாக்கியது தான் இந்த திரித்துவ விசுவாசம். மனிதர்களுடைய எண்ணங்களும் சிற்ப வேலையும் கொண்டு பொன்னிலும் வெள்ளியிலும் கல்லிலும் செதுக்கி வைத்திருக்கின்ற அன்னிய தேவதை கோலங்களைப் பார்த்து வெட்கப்படுகின்றது வேத சாஸ்திர ப்ண்டிதர்களுடைய விரூப சிருஷ்ட்டியான திரியேக மூர்த்தி விசுவாசம்.

திரியேக தெய்வ மெங்கின்ற கன்றுக்குட்டியினுடைய முன்னில் கிறிஸ்தவ லோகம் சாஷ்ட்டாங்க நமஸ்காரம் நடத்துகிறது. மூன்று ஆளுமைகளுக்குள்ளே ஒராளாயிருக்கின்ற பிதா குமார பரிசுத்தாவி என்ற திரியேக மூர்த்தி போல பயபடத்தக்கதும் ஏதோ ஒரு புத்தியீனன் சொன்னக் கதைப்போல அர்த்தமற்றதும், ஞானசூன்னியமுமான வேறொரு தத்துவம் பழைய தேவதா சங்கல்பங்களில் கூட இல்லை.

பரிசுத்த திரித்துவம் என்ற முத்திரையும் பக்தி வேஷமும் தரித்து பாரம்பரியத்தினுடைய துணையோடும் கூடிய இந்த திருட்டு எண்ணம் உத்தமர்கள் வழி தவறிபோகும் பொழுதும், தெய்வ வசனத்தை விசுவாசித்து, அதை கவுரவப்படுத்துகின்றவர்களுக்கு மவுனம் ஒரு அலங்காரமல்ல எங்கின்ற விசுவாசம் தான் இந்த போஸ்ட்டுகளை எழுதுவதற்குண்டான காரணம். இருட்டில் வழி தவறியலைகின்ற ஒருவருக்காவது வெளிச்சத்தின் இராஜபாதைகுள்ள வழி காட்டியாய் அமையுமென்றால் நாங்கள் வெற்றி பெற்றோம்.

(முடிவுற்றது)