பிதா குமார பரிசுத்தாவி மூவரும் சேர்ந்து ஒரு தெய்வம் என்ற வாதத்திற்கு சாதகமாயிருக்கின்ற ஒரு வாக்கியமோ திரித்துவம் என்ற சொல்லுக்கு ஒரு வார்த்தையோ வேதபுத்தகத்திலில்லை. பிதாவினுடைய சர்வாதிகாரத்தை புறம் தள்ளுகிறதாகவோ அல்லது குமாரன் தான் பிதா என்று அறிவிக்கின்றதாகவோ உள்ள ஒரு புள்ளியோ ஒரு கமாவோ வேதபுத்தகத்திலில்லை.
கணித சாஸ்த்திரமனுசரித்து திரித்துவம் என்றால் 3 x 1 = 3, 1 = 3, 3 = 1 என்று வருகிறது. திரித்துவ சித்தாந்தத்தில் இருந்து உருவெடுத்த நிரூபணங்கள் பிதாவைப்போல் வயதுள்ள குமாரன். தெய்வத்தினுடைய ஒரு பாகம் மரித்துப்போனது, தெய்வத்தினுடைய ஒரு பாகம் தெய்வத்தோடு ஜெபிப்பது, பரீட்சைக்குட்பட்டது. பாடுகள் அனுபவித்து, கொஞ்ச நாளில் மரணமடைந்தது. ஒரு குமாரன் சொந்த பிதாவிற்கு உயிர் கொடுத்து, திரும்பவும் தெய்வமனிதன் என்ற ஒரு விசேஷப்பட்ட ஆன்மாவாயிருக்கின்ற தெய்வத்திற்கு (யோவா :4:24) பரிசுத்தாவி எங்கின்ற இரண்டாவது ஆத்தும ஜீவியுண்டு. பிதா குமார பரிசுத்தாவி ஒரு தெய்வம் ஆனாலும் மூன்று தெய்வங்கள்.
பொருளில்லாததும் துர்வியாக்கியானம் செய்ததும், பொய்யானதுமான திரித்துவ சித்தாந்தம் வார்த்தைகளுக்கும் மனதிற்கும் விஷயமாகதது. அது மர்ம பிரதானமானதினாலும் கேள்வி கேட்காமல் கண் மூடி விசுவாசிக்க வேண்டுமென்று இக்கூட்டத்தினர் சொல்லுகிறார்கள். ஆனால் வேதபுத்தகம் மர்மம் என்று சொல்லுவது இப்போது மறைந்திருக்கிறதும் அந்தந்த நேரத்தில் நிச்சயித்திருக்கின்ற ஆளுமைகளாக வெளிப்படுத்தி கொடுக்கின்றதுமான ரகசியங்களைக் குறித்துதான்.
திரித்துவ உபதேசம் கிறிஸ்தவ மதத்தில் சாத்தான் ஏன் கொண்டுவந்தான்?
சாத்தானுடைய ஏழு வித கெட்ட இலட்ச்சியங்களை சாதிப்பதற்காக இந்த திரித்துவத்தை கிறிஸ்தவ மதத்தில் நுழைத்தான்.
அவைகள்:
1) யெகோவாவினுடைய மகிமையை குறைத்து காட்டுவதற்காகவும், அவருக்கு கிடைக்க வேண்டிய உன்னதமான பதவியிலும், அன்பிலும் மாயம் சேர்ப்பதற்காக.
2) பிதாவும் இயேசுவும் ஒன்று தான் என்ற கொள்கை முகாந்திரம் பிதா பக்தனும் எளிமையுள்ளவருமான குமாரனுக்கு துக்கமும் அவமானமும் வருவதற்காக.
3) புத்தியீனமும் மதியற்றதும் என்று காட்டி தெய்வ நிச்சயத்தைக்குறித்து நம்மை இருட்டில் தள்ளுவதற்காக.
4) வேத புத்தகம் முறன்பாடுள்ளதும் பொய்களும் நிறைந்த ஒரு விஷப்புத்தகம் என்று காட்டுவதற்காக.
5) விவேகத்தோடும் ஞானத்தோடும் முழு மனதோடும் தெய்வத்தை ஆராதிப்பதற்கும் நினைப்பதற்கும் முடியாத விதத்தில் தெய்வ ஜனங்களுக்கு சிந்தனை குழப்பங்களை கொடுத்து இவர்களுடைய மனதினை நிர்விசாரமாக்குவதற்காக.
6) இந்த விசுவாசத்தில் அடிமைகளானவர்களை மதபுரோகித மேலாதிக்கத்தில் சீக்கிரமாய் நம்ப வைப்பதற்காக.
7) வேதபுத்தகம், இப்படிபட்ட ஒரு பெரும் தவற்றையே போதிக்கின்றது என்று விபரீதமாக சிந்திப்பதினால் சிந்தான சக்தியுள்ளவர்களுக்கிடையில் விசுவாசமற்றவர்கள் பிறந்துவிடுவதற்கு வழி வகுத்து விடுவதற்காக.
முடிவுரை:
அண்டசராசரங்களுடைய மூலகாரணம் ஆதி அந்தமில்லாததும் சுயமாகவே இயங்குகின்றதும் தான் என்று ‘யுக்தி போதகம்’ நமக்கு போதிக்கின்றது. “ஏகமே வாதைத்தியம் பிரம்மா” என்கின்ற உபநிடதம் இதைத்தான் போதிக்கின்றது. உலக பிதாவான அந்த பராசக்தி தான் தெய்வம். மனிதர்களுக்கு சாபமோட்சம் என்கின்ற ஒரு பெரிய வேலைக்காக அவர் சொந்த குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். பிதாவிற்கும், குமாரனுக்கும் உள்ள இந்த பெரும் ஞானம் தான் நித்திய ஜீவனுக்கு அஸ்திபாரமான சத்தியம். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்”, (யோவான் :17:3) என்ற தெய்வ வசனம் இதற்கு சாட்சியாக நிற்கின்றது. குருவாகிய இயேசுவில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை வளைத்து ஒடிக்காமலும், காற்றில் பறக்கவிடாமலும் இருக்க வேண்டும் அல்லாமல் திரித்துவ வார்த்தை கொண்டு வருகின்றது அறிவின்மை தான்.
மற்ற மத புத்தகங்களைப் பார்க்கின்றப் பொழுது வேதபுத்தகத்திற்குள்ள மகிமை ஏறுகின்ற இந்த ஏக தெய்வ சித்தாந்தத்தை கரி பூசி காட்டுவதற்கு சாத்தான் மிக தந்திரமாக கொண்டுவந்தது தான் சாதாரண புத்திக்கு எட்டாத திரியேக தெய்வ விசுவாசம். படித்தவரும் புத்திசாலிகளுமான சபை மூப்பர்களூம் இந்த விஷயத்தில் அறியாமல் பிசாசினுடைய ஆயுதங்களாக மாறியிருக்கிறார்கள். எளிமையான வேத சத்தியங்களை வெறுத்து யெவனமுனிமார்களுடைய அடிசுவடு பின்பற்றி தத்துவ ஞானமெங்கின்ற பொய்யால் கட்டி உண்டாக்கியது தான் இந்த திரித்துவ விசுவாசம். மனிதர்களுடைய எண்ணங்களும் சிற்ப வேலையும் கொண்டு பொன்னிலும் வெள்ளியிலும் கல்லிலும் செதுக்கி வைத்திருக்கின்ற அன்னிய தேவதை கோலங்களைப் பார்த்து வெட்கப்படுகின்றது வேத சாஸ்திர ப்ண்டிதர்களுடைய விரூப சிருஷ்ட்டியான திரியேக மூர்த்தி விசுவாசம்.
திரியேக தெய்வ மெங்கின்ற கன்றுக்குட்டியினுடைய முன்னில் கிறிஸ்தவ லோகம் சாஷ்ட்டாங்க நமஸ்காரம் நடத்துகிறது. மூன்று ஆளுமைகளுக்குள்ளே ஒராளாயிருக்கின்ற பிதா குமார பரிசுத்தாவி என்ற திரியேக மூர்த்தி போல பயபடத்தக்கதும் ஏதோ ஒரு புத்தியீனன் சொன்னக் கதைப்போல அர்த்தமற்றதும், ஞானசூன்னியமுமான வேறொரு தத்துவம் பழைய தேவதா சங்கல்பங்களில் கூட இல்லை.
பரிசுத்த திரித்துவம் என்ற முத்திரையும் பக்தி வேஷமும் தரித்து பாரம்பரியத்தினுடைய துணையோடும் கூடிய இந்த திருட்டு எண்ணம் உத்தமர்கள் வழி தவறிபோகும் பொழுதும், தெய்வ வசனத்தை விசுவாசித்து, அதை கவுரவப்படுத்துகின்றவர்களுக்கு மவுனம் ஒரு அலங்காரமல்ல எங்கின்ற விசுவாசம் தான் இந்த போஸ்ட்டுகளை எழுதுவதற்குண்டான காரணம். இருட்டில் வழி தவறியலைகின்ற ஒருவருக்காவது வெளிச்சத்தின் இராஜபாதைகுள்ள வழி காட்டியாய் அமையுமென்றால் நாங்கள் வெற்றி பெற்றோம்.
(முடிவுற்றது)