Monday, August 22, 2011

தெய்வம் ஒருவரோ? திரியேகரோ? (மூன்றாம் பாகம்)

சர்வ வல்லமையுள்ள தெய்வம் தான் யெகோவா.

தெய்வம் என்ற வார்த்தையைப் போல யெகோவா என்ற வார்த்தை ஒரு சாதாரணமான நாமமல்ல. சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தெய்வத்திற்கு மட்டுமுள்ள நாமம். வேத புத்தகத்தில் வேறு யாருக்கும் இந்த நாமம் கொடுக்கப்படவில்லை. யெகோவா என்ற இந்த நாமம் மொழிபெயர்க்காமல் அப்படியே அழைக்கவேண்டும். இந்த வார்த்தையை யெகோவா என்றோ யேகோவா என்றோ சொல்லவேண்டும் என்றது JHVH ஆகிய 4 எழுத்துக்களோடு சேர்க்கின்ற மற்ற எழுத்துக்கள் எவ்வளவு, அவைகள் எவைகள்? என்பதைப் பொறுத்திருக்கிறது. பல ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் யெகோவா என்ற வார்த்தையை கர்த்தர் என்று மொழி பெயர்த்திருப்பதினால் அதனுடைய மகிமை மறைக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து யெகோவா என்ற நாமத்தில் அறியப்படுகிறார் என்ற ஒரு பொய்யான நினைப்பு சிலருக்குண்டு. ஆகையால் இந்த நாமம் சர்வத்திற்கும் ஆதிமூல காரணமாகிய மகா தெய்வமான யெகோவாவுக்கு மட்டுமுள்ளதென்று தொனிக்கின்ற அனேக வேத பகுதிகளை இங்கு காட்டுகிறேன். நான் கர்த்தர், இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரங்களுக்கும் கொடேன் (ஏசாயா:42:8) யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவர் பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் (சங்கீதம்: 83:17).


இயேசு யெகோவா அல்ல என்பதற்கு மற்றோரு விளக்கம் தான் சங்கீதம்:110:1. "கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்படியாக்கிப் போடும் வரைக்கும், நீர் என்னுடைய வலது பக்கத்தில் உட்காரும் என்றார். இதை வைத்துப் பார்க்கும் பொழுது யெகோவாவும் ஆண்டவர் என்று சொல்லியிருக்கின்ற இயேசுவும் வித்தியாசமான ஆட்கள். ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் நாட்களில் இயேசுவை தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைப்பார் என்று யேகோவா வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.(மத்தேயு :22:41-46, எபிரெயர்:1:13, வெளி: 20:4,6, தானி: 7:13,14, 1கொரி:15:25) எல்லா சத்துருக்களையும் தமது பாதத்திற்கு கீழாக்கிப்போடும் வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.

ஏசாயா 6:1,3,5,8,11,12 இந்த வாக்கியங்களில் யேகோவாவையும் இயேசுவையும் இரண்டு ஆட்கள் என்று சொல்லியிருக்கிறது. ஏசாயா:1,8,11 ஆகிய இந்த வாக்கியங்களில் வருகின்ற அதோனாய் என்ற எபிரேய சொல், இயேசுவைக் குறிக்கிறது. அதுபோல 3,5,12 ஆகிய இந்த வாக்கியங்களில் யேகோவா அல்லது JHVH எனப்படுகின்ற நான்கு எழுத்துக்கள்தான் எபிரேய மொழியில் உள்ளது. ஆங்கிலத்தில் அதோனாய், யேகோவா என்ற இரண்டு சொற்களும் கர்த்தர் என்று வரையறுத்து மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் என்ற சொல்லுக்கு ஆங்கில சொல்லான லார்டு ("Lord") பயன்படுத்தவேண்டும். அதோனாய், யேகோவா இவைகளுக்கிடையிலுள்ள வேறுபாட்டினை காட்டுவதற்காக அதோனாய் என்ற சொல்லினுடைய மொழிபெயர்ப்பில் "Lord" என்ற சொல்லில் முதலில் மட்டும் பெரிய எழுத்து பயன்படுத்தப்படுகிறது. அடுத்த சொல்லில் முதலிலும் முடிவிலும் பெரிய எழுத்துக்களையே தான் பயன்படுத்தவேண்டும் (i.e."LORD"). 'யார் நமது காரியமாய் போவான்' என்ற 8-வது வாக்கியத்தில், 'நமது' என்ற வார்த்தையில் யேகோவாவும் இயேசுவும் உள்ளடங்கியிருக்கிறார்கள். யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவார்? - என்ற கேள்வி இயேசுவினுடையது தான். ஏசாய 6-வது அதிகாரத்தில் யேகோவாவை JHVH ஆகிய எழுத்துக்களை கொண்டும், இயேசுவினை அதோனாய் என்ற சொல் கொண்டும் சொல்லியிருப்பதினால், இயேசு யெகோவா அல்ல என்று நன்றாக தெரிகிறது. இயேசு யேகோவாவினுடைய செயலாளர் தான். மல்கியா :3:1, யோசுவா 5:14 போன்ற அனேக வேத பகுதிகள் இதற்கு சான்றாக இருக்கிறது.

மற்ற வேத பகுதிகளையும் கூட உங்கள் கவனத்திற்குள் கொண்டு வருகிறேன். இயேசு யேகோவா அல்ல. யேகோவாவினுடைய அடியார். (ஏசாயா:42:1,6,19, 52:13, 53:11) இயேசு யேகோவா அல்ல, யேகோவாவினுடைய அடியார்.(ஏசாயா 53:1) இயேசு யேகோவா அல்ல அவருடைய முதல் பேரானவன் (சங்கீதம் 89:27; 2:7,12) அப்போஸ்தலர் 13:33, எபிரெயர்1:5; 5:5) ஆகிய இந்த வசனங்களை பொருத்திப் பாருங்கள். அங்கே இயேசு யேகோவா அல்ல, யேகோவாவினுடைய தூதன் தான் என்பது விளங்கும். (ஆதியாகமம்:22:11,15, யாத்திராகமம்:3:2, எண்ணாகமம் 22:22, 27,31,34,35, சங்கீதம்:34:7) அவர் யேகோவா அல்ல, யேகோவாவினுடைய மேய்ப்பன். (சகரியா:13:7, நீதி:8:30) இயேசு யேகோவா அல்ல, அவருடைய செல்லப்பிள்ளை.

(தொடரும்)

தெய்வம் ஒருவரோ? திரியேகரோ? (இரண் பாகம்)

தெய்வம் என்ற வார்த்தையினுடைய பயன்பாடு, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லா தெய்வங்களைப் பற்றி சொல்லுகின்ற பொழுது, பொதுவான நாமமாகவும் பிதாவான ஏக தெய்வத்தைப்பற்றி சொல்லுகின்ற பொழுது முக்கியமான குறிப்பிட்ட நாமமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. உபாகமம்:6:4-ல் சொல்லப்பட்டிருக்கின்ற ஒரே தேவனாகிய கர்த்தர் தான் இங்கே சொல்லுகின்ற பிதாவான தெய்வம்,"இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே". (உபா:6:4) இஸ்ரவேலே கேள், நம்முடைய கர்த்தர் தெய்வமாகிய கர்த்தர் ஒருவர் என்றும், அல்லது கர்த்தர் நம்முடைய தெய்வம் என்றும் விவரிக்கலாம்.

தெய்வம் என்ற வார்த்தைக்கு சக்திமான் அல்லது வல்லமையுள்ளவர் என்று பொருள். ஆனால் எல்லா நேரங்களிலும் சர்வ வல்லவர் அல்லது யெகோவா (கர்த்தர்) என்றல்ல இங்கே சொல்லப்படுகிறது. ஏல், ஏலாக், ஏலோக, ஏலோகிம் என்று நான்கு எபிரேய வார்த்தைகளுடைய மொழிபெயர்ப்பு தான் தெய்வம் என்ற வார்த்தை. எல்லா வார்த்தைகளுக்கும் வல்லமை, பெரிது என்று பொருள். இது ஒரு சாதாரணமான நாமம். கர்த்தராகிய இயேசுவினையும் பிதாவான தெய்வத்தையும் இந்த சத்தத்தினல் விவரிக்காலாம். இதில் தப்பொன்றுமில்லை. தேவதூதர்களையும் மனிதரில் சக்தியுள்ளவர்களையும் இந்த சத்தத்தினல் விவரிக்கிறார்கள்.

உபாகமம்:10:17-ல் ஏலோகிம் என்ற வார்த்தை சர்வ வல்லவரான யெகோவாவான தெய்வத்தையும், மற்ற தெய்வங்களையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் தேவனாகிய [(ஏலோகிம்) கர்த்தர் தேவாதிதேவன் {தெய்வங்களுடைய (ஏலோகிம்) தெய்வம் (ஏலோகிம்).] ஏலோகிம் என்ற வார்த்தைக்கு ஒருமையிலும், பன்மையிலும் அதற்குபொருள் உண்டு. ஆதியாகமம் :32:30- லும் நியாதிபதிகள்:13:22-லும் தெய்வத்தினுடைய தூது கொடுப்பவர் என்ற நிலையில் ஒரு தூதனை(ஓராள்) ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாத்திராகமம்:7:1-ல் மோசேயை ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாடு எழுத்தாளர்கள் ஏலோகிம் என்ற பன்மையோடு ஒருமையையும் சேர்த்து சிறப்பித்திருக்கிறார்கள். எகிப்து தேவர்களின் மேல் நீதியை செலுத்துவேன் என்ற வசனத்தில் (யாத்திராகமம்:12:12) தேவர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஏலோகிம் என்ற வார்த்தையில்தான், இந்த இடத்தில் பிரபுக்கள் என்ற பொருள் பொருத்தமாயிருக்கிறது. யத்திராகமம்:21:6, 22:8,9,28 ஆகிய இந்த வசனங்களில் உள்ள நியாதிபதிகளும் "ஏலோகிம்" தான். இதற்கு காரணம் மோசேவினால் நியமிக்கப்பட்ட இந்த நியாதிபதிகள் உத்தியோக பதவி காரணத்தினால் பலவான் களாக மாறினார்கள். ஆதியாகமம்:3:5-லும் கிட்டத்தட்ட 200 இடங்களிலும் ஆவிக்குரிய நிலையில் தேவதூதர்களையும் ஏலோகிம் என்று சிறப்பித்திருக்கிறார்கள்.

ஏலோகிம் (தெய்வம்) என்ற வார்த்தை வித்தியாசமான பொருள் பயன்பாட்டிற்கு சிறந்ததாக காணப்படுகிறது தெளிவு தான். சங்கீதம் 82:1-ல் 'தெய்வம் (ஏலோகிம்) தேவர்களுடைய (ஏல்) சபையில் எழுந்தருளியிருக்கிறது தேவர்களின் (ஏலோகிம்) நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். இங்கே தெய்வம் (ஏலோகிம்) என்ற ஆதி வார்த்தை பூரணமாகவும் சர்வ வல்லவருமான யெகோவானவரை குறிக்கிறது. அதன் பின் வருகின்ற ஏல், ஏலோகிம் (தேவர்கள்) ஆகிய இந்த வார்த்தைகள், வல்லமையுள்ள மற்ற பிறரை குறிக்கிறது. கிறிஸ்து தலைமையாயிருக்கின்ற சுவிசேஷ சபையினுடைய அங்கத்தினர்களாகிய தேவ பிள்ளைகளை குறிப்பிடுகிறது. நீங்கள் தேவர்கள்(ஏலோகிம்) என்றும் நீங்கள் அனைவரும் உன்னதமானவருடைய (ஏல்யோல்) குமாரர்கள் என்றும் நான் சொன்னேன், என்றது அவரைக்குறித்துதான்.

வல்லமையுள்ள மற்ற எல்லொரைக்காட்டிலும் சர்வ வல்லமையுள்ளவர்தான் பரலோக பிதாவானவர். எல்லோரிலும் மகா உன்னதமான பரம்பொருளானவர். எல்லா ஆசீர்வாதங்களும், கிருபைகளும் அவரில் இருந்து மட்டும் தான் கிடைக்கிறது. "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" (மாற்கு: 10:18) இயேசுவினுடைய இந்த வார்த்தைகளில் இதே பொருள் தான் உட்கொண்டிருக்கிறது. அனைத்து நன்மைகளிலும் உன்னத இடம் யெகோவா மட்டும் தான் என்றும் இயேசுவில் உள்ள நன்மைகள் அனைத்தும் (அவர் பூரணமான நன்மை நிறைந்தவர்) படைக்கும் கர்த்தாவாகிய பிதாவில் இருந்து கிடைத்தது என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
(தொடரும்)

தெய்வம் ஏகரோ, திரியேகரோ? பாகம் ஒன்று

"வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அனேக தேவர்களும் அனேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்த்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." (1கொரி:8:5,6)

அப்போஸ்தலனாகிய பவுல் இந்த விஷயத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். சகலத்திற்கும் காரணர் பிதாவான யெகோவா மட்டும் தான். அவர் தான் சருவத்திற்கும் ஆதி காரணர். அதுவுமல்லாமல் எல்லாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு முகாந்திரமோ அவர் வழியாகவோ ஆகிறது. தேவனுடைய சிருஷ்ட்டிக்கு ஆதியுமாயிருக்கிற (வெளி:3.14) இயேசு முகாந்திரம் தான் அதற்கு பிந்தியுள்ள எல்லா கிரியைகளூம் நடத்தப்பட்டிருக்கிறது. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவா.1:13) அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுவரூபமும், சர்வ சிருஷ்ட்டிக்கும் முந்தின பேறுமானவர். அவருக்குள் சகலமும் சிருஷ்ட்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகலமும் அவரைக்கொண்டும் அவருகென்று, சிருஷ்ட்டிக்கப்பட்டது.(கொலோ:1:15-17) எல்லாருக்கும் ஓரே தேவனும், பிதவும் உண்டு. அவர் எல்லார்மேலும் எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் (எபேசி :4:6)

இயேசுவினுடைய சாட்சியும் இதற்கு ஒப்பாயிருக்கிறது. நான் பிதாவல்ல, பிதாவினுடைய சித்தம் நிறைவேற்றுகின்ற அவருடைய கீழ்ப்படிதலுள்ள குமாரன் என்று இயேசு சொன்னார்.(யோவா:9:35-37,10:36-39). நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது(யோவா:5:19,3;6:38;4:34). நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக்கிறார் என்றது சரிதான். ஆனால் எந்த விதத்தில் அவர் ஒன்றாயிருக்கிறோம் என்றும், அதே போல அவருடைய சீஷர்களும் ஒன்றாயிருக்கவேண்டுமென்றும் அவருடைய ஜெபத்தில் விளக்கியிருக்கிறார் (யோவா:10:30,17:11). ஒரே மனதும், இதயமும், லட்ச்சியமும் உண்டாயிருக்கும்போதுதான் ஐக்கியம் வருகிறது. கணவன் மனைவி இவர்களுடைய இதயங்கள் உறவில் ஒன்று சேருகின்றது போலுள்ள ஒரு நிலைக்கு இது துல்லியமாயிருக்கிறது. இப்படி இந்த இணைகள் ஒன்றாய் மாறுகிறது, ஆனால் ஓரே ஆள் அல்ல.

இயேசு கற்றுதந்ததற்கு நேர் எதிராக பிதாவும் குமாரனும் எல்லா விதத்திலும் துல்லியதையுள்ள ஒரே ஆள் தான் என்று விசுவாசிப்பதினால் தங்கள் குருவிற்கு அதிக மதிப்பு கொடுக்கிறோம் என்று சிலர் நினைக்கிறது போல தோன்றுகிறது. ஆனால் இயேசு இவ்வாறு சொல்கிறார்,"என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்" என்று (யோவார்:14:28). அப்போஸ்தலனகிய பவுல் சொல்கிறார், "கிறிஸ்த்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்", (யோவா:11:3) " குமாரன் தாமும் தமக்குச் சகலத்தேயும், கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் என்று (1கொரி:15:28) தெய்வத்தினுடைய பரமாதிகாரத்திற்கு எதிரில்லாத தெளிவுதான் பிலி2:6ல் சொல்லியிருந்தும், இங்கே "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளயாடின பொருளாக எண்ணவில்லை". அதாவது இயேசுதெய்வத்தோடு சமமாயிருக்கிறார் என்று சாதிக்கவோ, தெய்வத்தினுடைய சர்வாதிகாரத்தில் பிரவேசிப்பதற்கு வழி தேடவோ செய்யவில்லை என்று பொருள். இந்த பிரகாரமுள்ள அதிமோகவும், உரிமை வாதமும், அதற்காயுள்ள நீக்கங்களூம் சாத்தானில் நின்று தான் உண்டாயிருக்கிறது(ஏசாயா:14:!2-14) ' நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன் என்றும் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் சாத்தான் சொன்னான்.

இயேசு சொன்னார், நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான்". (யோவா:13:13). பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்: என்றும் இயேசு சொன்னார்(மத்தே:23:9). உயித்தெழுந்ததற்க்கப்புறமும் இயேசு, தெய்வத்தை அவருடைய பிதாவும் நம்முடைய பிதாவும் என்று விசேஷமாக சொன்னார். நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்றும் இயேசு சொன்னார்(யோவா 20:17). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவின் பிதாவாகிய தேவன் கிறிஸ்த்துவில் நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார் (1 பேதுரு1:3-5).

நித்தியரான தெய்வமும் பிதாவுமானவர் ஒருவர் மட்டும்தான் உண்டு என்று மிக தெளிவாக போதிக்கிறது. அவர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும், ஸ்தோத்தரிக்கப்படதக்கவர்(சங்கீ 41:13, 90:2, 106:48, ரோமர் 16:24,26) பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனும் ஒருவர் மட்டும்தான் (யோவா1:18, 3:16) தேவனுடைய சிருஷ்ட்டிக்கு ஆதியுமாயிருக்கிறவரும், தேவனுடைய தற்சுவரூபம், சர்வ சிருஷ்ட்டிக்கும் முந்தின பேறுமாயிருக்கிறவருமாகிறார்(சங்கீ2:7, 89:27, கொலோ 1:15) அவர் மாம்சமானார் (யோவா 1:14, ரோமர்:1:15) அவர் மனுஷரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக அவரை உயத்தினார்(பிலி 2:8,9). பிதாவு ஜீவன் கொடுகிறவரும் குமாரன் ஜீவன் பெற்றுக் கொள்கிறவரும் ஆகிறார்கள் என்ற ஒரு காரியம் நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பிதாவு என்ற நிலமையில், யெகோவா (கர்த்தர்) தம்முடைய ஒரே பேறான குமாரனுக்கு ஜீவன் கொடுத்திருக்கிறார். இயேசு, குமாரன் என்ற நிலமையில் பிதாவில் நின்றும் ஜீவன் பெற்றிருக்கிறார்.
(தொடரும்)