Wednesday, September 21, 2011

தெய்வம் ஏகரோ? திரியேகரோ? - பாகம் - 4

விசுவாச பிரமாணங்களும் திரித்துவ உபதேசங்களும் :

யேகோவாவினிடையேயும் நமது கர்த்தராகிய இயேசுவினிடையேயும் வித்தியாசமான ஆளுமையையும், இரண்டு பேருக்குமுள்ள பந்தத்தையும் குறித்தும் வேதப் புத்தகத்திலுள்ள சாட்சிகள் சந்தேகமாயிருக்கும் போது திரியேக தெய்வம் எங்கின்ற விஷயத்திற்கும் கிறிஸ்த்தவர்களும்மிடையில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகவும் ஆச்சரியப்பட தக்கதாயிருக்கிறது. திரியேக தெய்வம் என்றால் ஒரு தெய்வத்தில் மூன்று ஆளுமைகள் அல்லது ஒருவரில் மூன்று தெய்வங்கள். இந்த அறிவு ஒன்றுகொன்று முரன்பாடாயிருக்கிறது, ஒன்றுகொன்று விரோதமாயிருக்கிறது. இந்த பொய்யான அறிவுக்கு கிடைத்திருக்கின்ற அங்கீகாரம் விசுவாசமில்லாத பேர், சபைகளுக்கு உண்டான நித்திரையினாலும், துர் உபதேசங்களாலும் சத்துரு அவனை த்ந்திரமாய் இறுக்கி கட்டி வைத்திருக்கிறது. நமது கர்த்தராகிய இயேசு மகா சக்தி நிறைந்தவர் என்ற நிலையில் ஒரு தெய்வமாக அங்கீகருக்கும் பொழுது, அவர் தான் பிதாவும் சிருஷ்ட்டிகர்த்தரும் எங்கின்ற வேத புத்தகத்தின் பொய் உபதேசங்களை அல்லது விபரீத உபதேசங்களை நாங்கள் எதிர்க்கிறோம். இதை நாங்கள் உதறிதள்ளுகிறோம், கண்டனம் செய்கிறோம்.

திரித்துவத்தை குறித்துள்ள விசுவாச பிரமாணம் (விசுவாச அறிக்கை) மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. கிறிஸ்துவிற்கு பிதாவோடுள்ள பந்தத்தைக் குறித்து முதல் அடி எடுத்து வைத்தது கி.பி.230ல் தான். பிதாவும் குமாரனும் ஒன்று என்ற தத்துவம் கி.பி.325ல் நிக்கியாசுன்னகதோஸ் அனுமதி கொடுக்கவில்லை. கி.பி.381ல் கூச்தந்தீனோபோலீச் முதல் சுன்னகதோசினுடைய காலம் வரை இந்த திரியேக தத்துவம் பூரணாமாய் வளரவேயில்லை. ஏகரும்(ஒருவர்) பரம சத்திய சொரூபருமான யேகோவாவை ஆராதிப்பதற்கு எப்போதும் எதிர்கின்ற (மத்தேயு :4:10) பிசாசு, ஜாதிகளுடைய திரித்துவ விசுவாசத்தை கிறிஸ்த்துவ சபையைக்கொண்டு அங்கீகரிப்பதில் கடைசியாக வெற்றியடைந்துவிட்டது.

அனைத்து மதங்களுடைய பொதுவான சுபாவம் அனேக தெய்வங்களில் விசுவாசம் வைப்பது தான். சர்வாதிகாரிகளான மூன்று தெய்வங்கள், மூன்றும் சேர்ந்து ஏக தெய்வம் (ஒரு தெய்வம்) என்பது அனேக தெய்வ மதங்களுடைய அஸ்திபாரமான தத்துவம் தான். இதேப்போல பாரதத்திலுள்ளவருடைய திரிமூர்த்திகள் தான் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன். பாபிலோணிலும், அசிரியாவிலும் எனோச், இல்லினோச், ஏயோச் என்ற மூன்று தெய்வங்களுண்டு. பினீஷியாவில், உலோமச், உளலோசுரோஸ், ஏலியூல் எங்கின்ற திரிமூர்த்திகள். இவைகள் எகிப்தில் நேப், தாஸ், ஓஸிரிஸ் என்று அழைக்கப்படுகின்றன. கிரீஸில் சியூச், போசிடோள். அயிடோனியச் என்றும் ரோமில் ஜூப்பிட்டர், நெப்டியூன், ப்ளூட்டோ என்ற மூன்று தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. கெல்டிக் ஜனங்களுக்கிடையில் இவைகள் முறையே கிரியோசின், பயோசேன, சிவன் என்றும், ஜெர்மன் ஜனங்களுக்கிடையில் தோர், வஓடார், ப்ரிக்கோ என்றும் அறியப்படுகிறது. மெக்சிக்கோவில் முன்பு வாழ்ந்தவர்கள் சூரிய தேவனை மூன்று சொரூபங்களில் வைத்து ஆராதித்தனர். அவை பிதா, சூரியன், குமார சூரியன் என்று அழைக்கப்பட்டன. அவர்களுடைய மகா சொரூபங்களில் ஒன்றுக்கு தங்கலங்கா என்ற நாமம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரில் மூன்று ஆளுமைகள். மூன்று ஆளுமைகளில் ஒருவர் என்ற பொருள் இதற்குண்டு. மூல தெய்வத்தில் இருந்து உருவெடுத்த இந்த மூன்று தெய்வங்களுக்கு திரிநாமக என்ற நாமம் அவர்கள் வழங்கினார்கள்.

பலதரப்பட்ட மத உபதேசக்காரருக்கு ஒப்பாக பல கிறிஸ்தவ மதாசாரிர்களும் சாத்தானுடைய சதி திட்டத்தில் விழுந்து பல தெய்வ விசுவாசமும், ஏக தெய்வத்தில் மூன்றாளுமைகள் என்று ஏற்றுக்கொண்டார்கள். எப்படியானாலும் யுக்தி வேறுபாடுகளுடைய காரியத்தில் அன்னிய ஜாதிகளைப் போலும் புறம் தள்ளுகிறது இந்த கிறிஸ்தவர்களுடைய திரியேக தேவ சாஸ்த்திரம்.

ஏனென்றால் தெய்வத்தில் பிதா, குமாரன், பரிசுத்தாஅவி எங்கின்ற மூன்று ஆளுமைகளும் ஒரே ஒரு தெய்வம் தான். இதனுடைய பொருள் பார்க்கும் பொழுது ஒன்று தான், வல்லமையிலும் மகிமையிலும் துல்லியரும் என்றது தான் திருத்துவ வரையறை. மற்ற மதங்களைப் போலேயுள்ள இந்த கள்ள நாணயத்த்தினுடைய மறுபக்கத்தில் பிற ஜாதிகளுடைய ஆராதனை மூர்த்தியான மகா தேவியுடைய இடத்தில் இயேசுவினுடைய மாதாவை நியமித்திருக்கிறது. திருமூர்த்திகளுக்கு அடுத்து மகாதேவிக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜாதிகளுடைய தேவன்மார்கலளுக்கிடையிலும் தேவிமார்களுக்கிடையிலும் பரிசுத்தவாங்களை நியமித்திருக்கிறது. இப்படியாக தேவன்மாரும் தேவிமாரும் உள்ள கிறிஸ்தவமல்லாத மற்ற மதங்களைப்போல கிறிஸ்தவ மதமும் மாறி, கிறிஸ்தவர் என்ற பேர் மட்டுமுள்ள கிறிஸ்த சபைகளில் கத்தோலிக்க மதத்தில் தேவன்மாரையும், தேவிமாரையும் ஆராதிப்பதிலுள்ள வேர் ஆழமாக ஊன்றிப்போயிருக்கிறது. ஆகையால் கத்தோலிக்க மதத்திற்கு பல தெய்வ மதங்களுடைய வரிசையில் இடம் கொடுக்கலாம். ப்ரொட்டஸ்டான்ட் (Protestants)- ல் முக்கால் பிரிவுகளும் அனுசரித்துவருகின்ற திரித்துவ விசுவாசம் கத்தோலிக்க மதத்திலிருந்து வந்தது தான்.

(தொடரும்)

No comments:

Post a Comment