Monday, August 22, 2011

தெய்வம் ஒருவரோ? திரியேகரோ? (மூன்றாம் பாகம்)

சர்வ வல்லமையுள்ள தெய்வம் தான் யெகோவா.

தெய்வம் என்ற வார்த்தையைப் போல யெகோவா என்ற வார்த்தை ஒரு சாதாரணமான நாமமல்ல. சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தெய்வத்திற்கு மட்டுமுள்ள நாமம். வேத புத்தகத்தில் வேறு யாருக்கும் இந்த நாமம் கொடுக்கப்படவில்லை. யெகோவா என்ற இந்த நாமம் மொழிபெயர்க்காமல் அப்படியே அழைக்கவேண்டும். இந்த வார்த்தையை யெகோவா என்றோ யேகோவா என்றோ சொல்லவேண்டும் என்றது JHVH ஆகிய 4 எழுத்துக்களோடு சேர்க்கின்ற மற்ற எழுத்துக்கள் எவ்வளவு, அவைகள் எவைகள்? என்பதைப் பொறுத்திருக்கிறது. பல ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் யெகோவா என்ற வார்த்தையை கர்த்தர் என்று மொழி பெயர்த்திருப்பதினால் அதனுடைய மகிமை மறைக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து யெகோவா என்ற நாமத்தில் அறியப்படுகிறார் என்ற ஒரு பொய்யான நினைப்பு சிலருக்குண்டு. ஆகையால் இந்த நாமம் சர்வத்திற்கும் ஆதிமூல காரணமாகிய மகா தெய்வமான யெகோவாவுக்கு மட்டுமுள்ளதென்று தொனிக்கின்ற அனேக வேத பகுதிகளை இங்கு காட்டுகிறேன். நான் கர்த்தர், இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரங்களுக்கும் கொடேன் (ஏசாயா:42:8) யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவர் பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் (சங்கீதம்: 83:17).


இயேசு யெகோவா அல்ல என்பதற்கு மற்றோரு விளக்கம் தான் சங்கீதம்:110:1. "கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்படியாக்கிப் போடும் வரைக்கும், நீர் என்னுடைய வலது பக்கத்தில் உட்காரும் என்றார். இதை வைத்துப் பார்க்கும் பொழுது யெகோவாவும் ஆண்டவர் என்று சொல்லியிருக்கின்ற இயேசுவும் வித்தியாசமான ஆட்கள். ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் நாட்களில் இயேசுவை தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைப்பார் என்று யேகோவா வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.(மத்தேயு :22:41-46, எபிரெயர்:1:13, வெளி: 20:4,6, தானி: 7:13,14, 1கொரி:15:25) எல்லா சத்துருக்களையும் தமது பாதத்திற்கு கீழாக்கிப்போடும் வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.

ஏசாயா 6:1,3,5,8,11,12 இந்த வாக்கியங்களில் யேகோவாவையும் இயேசுவையும் இரண்டு ஆட்கள் என்று சொல்லியிருக்கிறது. ஏசாயா:1,8,11 ஆகிய இந்த வாக்கியங்களில் வருகின்ற அதோனாய் என்ற எபிரேய சொல், இயேசுவைக் குறிக்கிறது. அதுபோல 3,5,12 ஆகிய இந்த வாக்கியங்களில் யேகோவா அல்லது JHVH எனப்படுகின்ற நான்கு எழுத்துக்கள்தான் எபிரேய மொழியில் உள்ளது. ஆங்கிலத்தில் அதோனாய், யேகோவா என்ற இரண்டு சொற்களும் கர்த்தர் என்று வரையறுத்து மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் என்ற சொல்லுக்கு ஆங்கில சொல்லான லார்டு ("Lord") பயன்படுத்தவேண்டும். அதோனாய், யேகோவா இவைகளுக்கிடையிலுள்ள வேறுபாட்டினை காட்டுவதற்காக அதோனாய் என்ற சொல்லினுடைய மொழிபெயர்ப்பில் "Lord" என்ற சொல்லில் முதலில் மட்டும் பெரிய எழுத்து பயன்படுத்தப்படுகிறது. அடுத்த சொல்லில் முதலிலும் முடிவிலும் பெரிய எழுத்துக்களையே தான் பயன்படுத்தவேண்டும் (i.e."LORD"). 'யார் நமது காரியமாய் போவான்' என்ற 8-வது வாக்கியத்தில், 'நமது' என்ற வார்த்தையில் யேகோவாவும் இயேசுவும் உள்ளடங்கியிருக்கிறார்கள். யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவார்? - என்ற கேள்வி இயேசுவினுடையது தான். ஏசாய 6-வது அதிகாரத்தில் யேகோவாவை JHVH ஆகிய எழுத்துக்களை கொண்டும், இயேசுவினை அதோனாய் என்ற சொல் கொண்டும் சொல்லியிருப்பதினால், இயேசு யெகோவா அல்ல என்று நன்றாக தெரிகிறது. இயேசு யேகோவாவினுடைய செயலாளர் தான். மல்கியா :3:1, யோசுவா 5:14 போன்ற அனேக வேத பகுதிகள் இதற்கு சான்றாக இருக்கிறது.

மற்ற வேத பகுதிகளையும் கூட உங்கள் கவனத்திற்குள் கொண்டு வருகிறேன். இயேசு யேகோவா அல்ல. யேகோவாவினுடைய அடியார். (ஏசாயா:42:1,6,19, 52:13, 53:11) இயேசு யேகோவா அல்ல, யேகோவாவினுடைய அடியார்.(ஏசாயா 53:1) இயேசு யேகோவா அல்ல அவருடைய முதல் பேரானவன் (சங்கீதம் 89:27; 2:7,12) அப்போஸ்தலர் 13:33, எபிரெயர்1:5; 5:5) ஆகிய இந்த வசனங்களை பொருத்திப் பாருங்கள். அங்கே இயேசு யேகோவா அல்ல, யேகோவாவினுடைய தூதன் தான் என்பது விளங்கும். (ஆதியாகமம்:22:11,15, யாத்திராகமம்:3:2, எண்ணாகமம் 22:22, 27,31,34,35, சங்கீதம்:34:7) அவர் யேகோவா அல்ல, யேகோவாவினுடைய மேய்ப்பன். (சகரியா:13:7, நீதி:8:30) இயேசு யேகோவா அல்ல, அவருடைய செல்லப்பிள்ளை.

(தொடரும்)

No comments:

Post a Comment