பரிசுத்தவான்களும் பரிசுத்தமில்லாதவரும் ஆடம்பரமானவர்களும் ஆடம்பரமில்லாதவர்களும் தனவான்களும் தரித்திரர்களும் ஆகிய நம்முடைய சொந்தகாரர்களும் நண்பர்களும் அயல் வீட்டாரும் ஆகிய எல்லோரும் மரித்திருக்கிறார்கள், மரித்துப்போன இவர்கள் எங்கே?
“சகோதரர்களே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களிடையே தைரியமாய்ப் பேசுவதற்கு இடம் கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது”. “தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே”. (அப்போ:2:29,34).
“பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷ குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை”. (யோவான் :3:13)
பரிசுத்தவானோ, பரிசுத்தமற்றவனோ, ஆடம்பரமானவனோ ஆடம்பரமில்லாதவனோ நம்முடைய சொந்தகாரரும் நண்பர்களும் எங்கே? இந்த கேள்வியினுடைய பதிலுக்கு நம்முடைய வாழ்க்கையோடு விதி கற்பிக்கின்ற ஒரு பாடம் உண்டு. அது நம்முடைய வேத சாஸ்திரங்களையும் வாழ்க்கை வரலாறுகளையும் பாதிக்கிறது. சரியான பதிலும் நல்ல தெளிவும் சக்தியும் நமக்கு தருகிறது. நல்ல அறிவின் ஆத்துமா நம்மில் உண்டாவதற்கு உதவியாய் இருக்கும். இந்த விஷயம் எனக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்று யாராவது சொன்னால் அவர் புத்தியில்லாதவரும் சிந்தனை சக்தியில்லாதவரும் என்று சுயமாக சொல்லிக்கொள்கிறார்கள். கொஞ்சம் காலத்துக்கு மட்டும் நம்மை நடத்துகின்ற, உணவு, உடை, தனம், அரசியல் போன்ற இந்த வாழ்நாளில் சாதாரண விஷங்கள் போல் கணக்கிலெடுக்கவேண்டியதும் படிபதற்கும் என்றால் நாமும் நம்முடைய அண்டைவீட்டாரும் மொத்தத்தில் மனுஷ ராசியின் நித்தியமான வருங்காலம் எவ்வளவு கவனிக்கப்படவேண்டியதாயிருக்கிறது.
தெய்வம் இல்லை என்று சொல்லுகிறவர்களுடைய பதில் என்ன?
சொந்தமாகவும் சுதந்திரமாகவும் சிந்திப்பதில் பெருமை அடைகின்றவரும் தெய்வம் இல்லை என்று வாதிடுகின்றவர்களுமாகிய எங்களுடை நண்பர்களாகிய உங்களிடம் ஒரு கேள்வி, மரித்தவர் எங்கே? என்ற எங்களுடைய தேடுதலுக்கு உங்கள் பதில் என்ன? உங்களுடைய பதில் இவ்வாறு தான் இருக்கும், “எங்களுக்கு தெரியாது”. வருங்கால வாழ்க்கையை நாங்கள் விசுவாசிக்கிறொம். ஆனால் அதற்கு ஒரு தெளிவும் இல்லை. தெளிவுகள் ஒன்றும் இல்லாததினால், மிருகங்களைப்போல மனிதர்களும் மரிக்கிறார்கள். பரிசுத்தவான்களுடைய பாக்கியங்களைக்குறித்துள்ள உங்கள் நம்பிக்கைகளை அவமதித்தாலும் எங்களுடைய இந்த அறிவில் ஒட்டுமொத்த மனித குலமும் ஆறுதல் அடைவார்கள். காரணம் முக்கால் பங்கு மனிதர்களுடைய நம்பிக்கையின் படி, வேதனையில் வாழ்வதைக்காட்டிலும் மிருகங்களைப்போல இறந்துபோவதுதான் நல்லது.
கீழ்தரமான இந்த பதிலுக்கு நாங்கள் எங்கள் நண்பர்களிடம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு வாழ்க்கை உண்டு என்றோ உண்டாயிருக்க வேண்டுமென்றோ, வாஞ்சிக்கின்ற எங்கள் இதயத்திற்கோ, புத்திக்கோ இந்த பதில் போதுமானதல்ல. திவ்வியதரிசனத்தில் மனிதன் உன்னதமானவன் என்று சொல்ல தக்க வண்ணமாக சிருஷ்டித்த கர்த்தர் அவனுடைய தாலந்துகளில் மிருகத்தை காட்டிலும் ஒரு உயர்ந்த பதவியில் படைத்திருக்கிறார் என்று பறைசாற்றுகின்ற நம்முடைய உள் மனதிற்கோ இந்த பதில் திருப்தி தரவேயில்லை. அதுமட்டுமல்ல இந்த சிறுவாழ்நாளில் அனுபவிக்கும் வேதனைகளும் கஷ்டங்களும் அனுபவங்களும் படிப்பினைகளும் பிரயோஜனப்படுவதற்கு ஒரு சந்தர்பம் இல்லாமல் போனால் இதெல்லாம் தேவையில்லாததும் பரிதவிக்க கூடியதாயிருக்கும். நம்முடைய கேள்விக்கு திருப்திகரமான ஒரு பதில் கண்டுப்பிடிப்பதற்கோ நாம் கூடுதலாக ஆராய்ந்து பார்க்க வேண்டியதாயிருக்கிறது.
ஜாதிகளுடைய பதில்:
உலகத்தில் முக்கால் பாகம் ஜனங்களும் ஜாதிகளானபடியினால் மக்கள் தொகையைப்பார்க்கும்பொழுது மரித்தவர் எங்கே? என்ற கேள்விக்கு அவர் தருகின்ற பதில் தான் அடுத்ததாக நாம் ஆராய்ந்துப்பார்க்கவேண்டியது. அவர் இரண்டு சாதாரணமான பதில்கள் தான் தந்தார். மறுபிறவியில் விசுவாசிக்கின்றவர்கள் தான் அவரில் முக்கியமானவர்கள். அவர் இவ்வாறு பதில் தருககிறார்,” ஒருவர் மரிக்கும்பொழுது அந்த ஆள் மரிக்கிறதில்லை. ஒரு மாற்றம் மட்டும் உண்டாகின்றது இந்த ஆயுசில் உள்ள ஜீவிதத்திற்கு வாழ்க்கை பிரகாரம் தான் அந்த ஆளுடைய வருங்காலமும் அந்த ஆளுடைய வாழ்க்கையின் பிரகாரம் உயர்ந்ததோ தாழ்ந்ததோ ஆன ஒரு வாழ்க்கை கிடைக்கும். சில சமயம் பூனையாகவும் நாயாகவும் எலியாகவும் யானையாகவும் வரலாம். முன்னே நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் இப்பொழுதுள்ள வாழ்க்கை புத்திசாலித்தனமாக வாழ்ந்தால் மேதைகளாகவும், ஞானிகளாகவும் பிறகு பிறப்பார்கள் என்றும் கிடைத்த வாழ்க்கையை துஷ்டத்தனமாக வாழ்ந்தால் திரும்பவும் தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு ஜீவனாக மாறுமென்று என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது யானையாகவும் ஒரு புழுவாகவும் அல்லது மற்ற எந்த ஒரு மிருகமாகவும் வரலாம். அதனடிபடையில்தான் நாங்கள் தாழ்ந்த நிலையிலுள்ள மிருகங்களோடும் பிராணிகளோடும் அன்பு காட்டுகின்றதும் எந்தவித மாமிச ஆகாரங்கள் நாங்கள் சாப்பிடாத்ததும். நாம் ஒரு புழுவை காலால் மிதித்து சாகடித்தால், நம்முடைய மரணத்திற்கு பிறகு இதைபோலுள்ள பிராணியாக பிறக்க கூடும்.
(2) ஜாதிகளில் ஒரு பாகம் ஜனங்கள் அதாவது நன்மை செய்கின்றவர்களுக்கு, நல்ல இடங்களும் தீயவர்களுக்கு பல தரத்திலுள்ள தண்டனை கிடைக்கின்ற நரகமும் கிடைக்குமென்று நாங்கள் நம்புகிறோம், மனிதர்கள் மரிக்கும் பொழுது அவர்களுடைய முந்தைய நிலைமையைக்காட்டிலும் மிகவும் தாழ்ந்தவராக மாறும் என்றும் “வைதரணி” எங்கின்ற பரலோக நதி கடக்கும் பொழுது நல்லவர்களோ அல்லது தீயவர்களோ இவர்களுடைய வாழ்க்கையோடு சேரும் என்றும் ஆசீர்வாதத்திற்கும் தண்டனைக்கும் வித்தியாசமான படிகள் உண்டு என்றும் அவர் உபதேசிக்கிறார்கள் இந்த சிந்தனை அல்லது இந்த அறிவு, உங்களுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? என்று நாங்கள் கேட்கிறோம். பதில், இவ்வாறு தான். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த விசுவாசத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம். இதனுடைய உற்பத்தியைக்குறித்து எங்களுக்கு தெரியாது. எங்களுடைய முற்பிதாக்கள் இவ்வாறு எங்களுக்கு உபதேசித்து வழி நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் இதை விசுவாசித்து வாழ்கிறோம்.
ஆனால் இந்த பதில் நம்முடைய புத்திக்கோ மனதிற்கோ சேர்ந்ததல்ல. பொய்யான உபதேசங்களும் வழிந்டத்துதலும் நம்முடைய விசுவாசமல்ல. நாம் பந்தம் வைத்திருக்கின்ற கர்த்தராகிய தெய்வத்தினுடைய திவ்விய வெளிப்பாட்டை நாம் தேடவேண்டியதாயிருக்கிறது.
தொடரும்...
No comments:
Post a Comment