Thursday, November 17, 2011

கத்தோலிக்க மதத்தினுடைய பதில் :

ஜாதிகளை விட்டுவிட்டு ஞானிகளும் உலக மக்களில் கால் பங்கு வசிக்கின்றவருமாகிய கிறிஸ்துவர்களிடம் நாங்கள் இந்த கேள்வி கேட்கிறோம். கிறிஸ்தவரே உங்கள் பதில் என்ன?

பதில் இவ்வாறு தான்:

எங்களிடம் வித்தியாசமான பதில்கள் உண்டு. எங்களில் மூன்றில் இரண்டு பங்கு கத்தோலிக்க விசுவாசமுள்ளவர்கள். ஒரு பங்கு பிரட்டஸ்டன்ட் (Protestant) விசுவாசமுள்ளவர்களுமாயிருக்கிறோம். பழமையானதும் அதிக மக்கள் தொகையுள்ளதுமானதால் முன் வரிசையில் கத்தோலிக்க பிரிவினர் நிற்கிறார்கள். யவன சபை மற்றும் ரோமன் சபைக்குட்பட்ட கத்தோலிக்க பிரிவினுடைய பதிலை நாம் பார்ப்போம். மரித்தவர் எங்கே? எங்கின்ற விஷயத்தைக்குறித்து, தெய்வம் தந்தது என்று உரிமை பாரட்டுகின்ற திவ்விய வெளிப்பாட்டின் அடிப்படையில் நீங்கள் நடத்திய கடுமையான உழைப்பிற்கும் படிப்பறிவினைக்கும் கிடைத்த கனிகளும், உங்கள் மூத்த சிந்தனையாளர்களையும் வேத சாஸ்த்திர ஞானிகளுடைய யோசனைகளையும், எங்கள் கத்தோலிக்க நண்பர்களே! எங்களுக்குத் தாருங்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் யாதொரு முன் விதியுமில்லாமல் பொறுமையோடும் கவனத்தோடும் கேட்கிறோம்.

நமது கத்தோலிக்க சகோதரர்கள் இவ்வாறு பதில் தருகிறார்கள்:

உங்கள் கேள்விக்கு தக்க பதில் நாங்கள் தருகிறோம். திவ்விய வெளிப்படுத்துதலுடைய எல்லா தரிசன திசைகளிலும் நாங்கள் இந்த விஷயத்தைக் குறித்துதான் பரிசோதனைகள் செய்தோம். ஒரு மனிதன் மரிக்கும்பொழுது மூன்று இடங்களில் ஒன்றில் செல்கிறான் என்பதுதான் எங்களூடைய விசுவாசமும் உபதேசமும். முதலாவதாக பரிசுத்தர். இவர்களுடைய தொகை மிகவும் குறைவு. இவர்கள் மரித்தவுடன் தெய்வ சன்னதியில் பரலோகத்திற்கு செல்கிறார்கள். தன் சிலுவையை சுமந்துக்கொண்டு எனக்கு பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்கமாட்டான் (லூக்கா:14:27) என்று கர்த்தராகிய இயேசு சொல்லியிருப்பது இவர்களைக்குறித்து தான். சத்தியத்தோடும், விசுவாசத்தோடும் சிலுவை சுமந்தவர்கள் தான் இந்த சிறிய ஆட்டின் கூட்டம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம். இவர்களைக் குறித்து ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் (மத்தேயு:7:14) என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இந்த பரிசுத்தவான்களுடைய கூட்டத்தில் எங்களுடைய பாஸ்டரோ, பிஷப்போ, கர்தினரோ, போப்ஆண்டவரோ, யாரும் இக்கூட்டத்தில் இல்லை. காரணம் இவர்களில் யாராவது மரிக்கும்பொழுது அவர்களுடைய ஆத்துமாக்களுடைய சாந்திக்காக திவ்விய பலிகள் சமர்ப்பிக்கிறார்கள். இது சபையினுடைய ஒரு சட்டம் (நியமம்) என்று உங்களுக்குத் தெரியும். பரலோகம் தான் என்று விசுவாசிக்கின்ற யாருக்காகவும் நாம் திவ்விய பூஜைகள் சமர்பிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அங்கே அனைத்து ஆத்துமாவிற்கும் சாந்திஉண்டு. நித்திய நரகம் தான் என்று விசுவாசிக்கின்றவர்களுக்காவும் நாம் திவ்விய பூஜைகள் சமர்பிக்கத்தேவையில்லை. எப்படியானலும் அனேகம் பேர்கள் நித்திய நரகத்திற்கு செல்லமாட்டார்கள் என்ற சத்தியத்தை நாங்கள் இங்கே கூறிக்கொள்கிறோம். மனம் திருந்தாத மதவிரோதிகள் கத்தோலிக்க சட்டங்களை குறித்து முழு ஞானமுண்டு என்றாலும் அவைகளை மனபூர்வமாக எதிர்த்தவர் மட்டும் தான் பயங்கரமும் வேதனையானதுமான இந்த நிலையை அடைவார்கள் என்று தான் நாங்கள் போதிக்கிறோம்.

அனேக இலட்சங்கள் சுத்தீகரண இடத்திற்கு:

எங்களுடைய சித்தாந்தத்தின் படி மரித்தவர் மொத்தத்தில் அந்த நிமிடத்தில் சுத்தீகரண இடத்துக்கு செல்கிறார்கள். இந்த பெயரில் இருந்து புரிகிறது போல விரதங்கள் இருப்பதாலும் குற்ற அறிக்கையிடுதலும் கஷ்டங்களும் உள்ள இடம் தான் என்றாலும் ஆசைக்கு இடமில்லாமல் இல்லை. தண்டனைக்கு ஒருவனுடைய யோக்கியதையும் அவனுடைய காரியங்களின் அடிப்படையில் இங்கேயுள்ள தண்டனைக்காலம் நூறாண்டுகளோ, அனேகாயிரம் ஆண்டுகளோ ஆகலாம். அதிகம் அறிய வேண்டுமானால் ஒரு பிரசித்திப்பெற்ற கத்தோலிக்கனும் கவி பண்டிதனுமான டாண்டே என்பவருடைய எழுத்துக்களை நாம் பார்க்கலாம். டாண்டே ஒரு உத்தம கத்தோலிக்கன். சபையினுடைய முழு பதவிகளுடன் ஒரு ஆசிரமத்தில் மரணமடைந்தார். இதனைக் குறித்த எங்களுடைய சிந்தனை படி டாண்டே தன்னுடைய இன்போர்ணோ (நரகம்) முதலான கவிதைகளில் சுத்தீகரண இடத்திலுள்ள தண்டனைகளுடைய நல்ல படங்கள் வரைந்திருக்கிறார். இந்த கத்தோலிக்க காவிய புத்தகங்களுடைய பதிப்பு உங்களுக்கு எந்த ஒரு நூலகத்திலும் கிடைக்கும்.

டோரே என்ற கலைஞர் பிரசித்திபெற்ற ஒரு கத்தோலிக்கனாயிருந்தார். இவர் டாண்டேயுடைய காவியத்தை மிக தெளிவாகவும் அழகாகவும் படமாக வரைந்திருக்கிறார். இன்போர்ணோ காவியத்தில் வர்ணித்திருக்கிறதுபோல நரக வேதனைகளை இவரது ஓவியங்களில் விவரித்திருக்கிறார். அதன் படி உயரமான மலைகளிலிருந்து வெட்டி கொதிக்கின்ற தண்ணீருக்குள் தள்ளி விடுகின்றது வரையிலும் பிசாசுகள் பின் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. சிலரை அவர்கள் அக்னிசூலங்கள் கொண்டு அடிக்கிறார்கள். வேறே சிலரை தலைகீழாய் நிறுத்துகிறார்கள். மற்ற பலரை அவருடைய பாதங்களை குழிக்குள்ளிட்டு சுடுகிறார்கள். சிலருக்கு பாம்பு கடி கிடைக்கிறது வேறு சிலர் உரைந்து மறைந்து போகிறார்கள். இப்படியாக இந்த சித்திரம் தொடர்ந்து கொண்டே போகிறது. டாண்டேவினுடைய இன்போர்ணோ காவியத்தை வாசிப்பதற்கு நாங்கள் போதிப்பது மரித்தவர் எங்கே? என்ற உங்களுடைய கேள்விக்கு தக்க பதிலானதால் கத்தோலிக்கருடைய விசுவாசம் அதில் தெளிவாக இருப்பதினால் தான்.

சுத்தீகரண இடத்தில் தான் முக்கால் பங்கு மக்கள் கூட்டம். ஏன் என்றால் அறிவின்மை இரட்சை அடைவதற்கு காரணமாகவோ பரலோக பதவிக்கு யோக்கியமாகவோ செய்ய முடியாது. பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு முன்னதாக அதற்கு பாத்திரமான எல்லோரும் சாத்தியமாகாத ஒரு சம்பிரதாயத்தில் சேர்ந்தவரும் ஆயத்தப்பட்டவருமாயிருக்கவேண்டும். பிராட்டஸ்டான்டு வகுப்பிற்குட்பட்ட இலட்சங்கள் அங்கே தான் உள்ளது. கத்தோலிக்க சபை மூலமாக அல்லாமல் அவர்களுக்கு பரலோக பிரவேசம் கிடைக்காது. அவர்களை கத்தோலிக்க மதம் புறக்கணித்தது, நாங்கள் பிறந்ததும் பரிசீலித்ததுமான விசுவாசத்தினுடைய வரவேற்பு மூலமாகயால், அவர்களை நித்திய நரகத்திற்கு பாத்திரராக எண்ணுவதற்கு தெய்வத்திற்கு முடியாது.

கத்தோலிக்கரும், கிட்டத்தட்ட அனைவரும் சுத்தீகரண இடத்திற்கு போகிறார்கள். சபையுடைய உதவிகரம், பரிசுத்த தண்ணீர், பாவங்கள் அறிக்கையிடுதல், திவ்விய பூஜைகள், புண்ணிய ஜலம், சுத்தமாக்கப்பட்ட சுடுகாடுகள் இவைகள் அனைத்தும் இருந்தும் அவையெல்லாம் பயனற்று போகுமாறு குணத்தில் தூய்மை, இவர்கள் சுத்தீகரண இடத்திலுள்ள சோக நிகழ்ச்சிகள் வழியாக இதயம் பரலோகத்துக்கு உகந்ததாக ஆயத்தப்படும் வரை அங்கே இருந்து புறம் தள்ளப்படுவார்கள். ஆனாலும் கத்தோலிக்கனுக்கு அவ்வளவு காலம் சுத்தீகரண இடத்தில் வாழவேண்டியதில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.

துக்ககரமான ஒரு எதிர்பார்ப்பு:

தங்களுடைய நிலைபாடுகளைக் குறித்துள்ள இந்த அறிவிப்பிற்கு (இந்த சித்தாந்தத்துக்கு) நாம் பெருமை பாராட்டலாம். அவர் சொல்லுகின்ற சுத்தீகரண இடம் எங்கே? என்றோ அல்லது அதனுடைய விவரங்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்றோ நாங்கள் கேட்கவில்லை. காரணம் அந்த மாதிரியான கேள்விகளால் அவர்கள் யாருக்கும் மனவருத்தம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தைக் குறித்து தெளிவான, அறிவு பூர்வமான கருத்தை அறிவதற்கு நாங்கள் விரும்புகிறோம். அவர்களுடைய இந்த பதில் நாங்கள் எதிர்பார்த்த படி, வேதத்திற்குட்பட்டதும் தெளிவானதும் ஞானமுள்ளதுமல்ல என்று சொல்வதில் நாங்கள் வருந்துகிறோம். அப்போஸ்தலர் சொல்லுகின்ற விதத்தில் முதல் பாவம் நிமித்தம் நாம் இப்போதே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் காலத்துக்குள் இந்த வாழ்க்கையும் துக்கமானது தான் என்ற சிந்தையும் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுள்ள சோதனைகள் தீரும் பொழுது, நித்தியம் போகட்டும், கொஞ்சம் நூற்றாண்டு வரைதான் என்கின்ற டாண்டேவினுடைய சித்திரங்கள் போலுள்ள பயங்கரமான காரியங்களுக்கு பாத்திரராய்த்தீருமோ என்கின்ற பயம் ஒவ்வொருத்தரையும் வாட்டி வதைக்கிறது. இவ்வாறு துக்கமான நூற்றாண்டுகள் சுத்தீகரணமும் தெய்வ சன்னிதிக்கும் பரலோக மகிமைக்கும் பாத்திரராக மாற்றும் என்றிருந்தாலும் நம் எல்லோருக்கும் துக்கமும் மகிழ்ச்சியின்மையும் உண்டாக்குகிறது.

எங்களுடைய கேள்விக்கு கத்தோலிக்கர் கொடுத்திருக்கின்ற பதில், மற்றவர்களிலிருந்தும் மேன்மையில்லை என்று சொல்லுகின்றபொழுது வேத பண்டிதர்களுக்கு புதுமையாய் தோன்றும், ஆனாலும் அதுதான் உண்மை எங்கள் இதயமோ, மனதோ திருப்தியடையவில்லை. இன்னும் திருப்திகரமான ஒரு பதிலை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியதாய் இருக்கிறது. மேலும் திருப்திகரமான ஒரு பதிலை தேடுவது தான் சரியாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

தொடரும் ....

No comments:

Post a Comment