Friday, February 10, 2012

வேதவசனம் சொல்வது என்ன?

மரணம் என்றால் மரணமென்றல்ல, மரணப்படுக என்றால் மரணத்திற்கு முன்புள்ளதைகாட்டிலும் கூடுதலாக ஜீவனும் பலனும் கிடைக்கும் எங்கின்ற கற்பனையில் அசஸ்திபாரமிட்டது என்று மேலே சொல்லப்பட்ட எல்லா சித்தாடந்தங்களும் அமைந்திருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும், நீ சாகவே சாவாய் என்று ஏதேனில் வைத்து ஆதி மாதா பிதாக்களிடம் தேவன் சொன்னார். நீங்கள் மரிப்பதில்லை என்று சொன்னது சாத்தான். கிறிஸ்துவர்கள் என்ற ஜாதிகள் சாத்தானுடைய பொய்யை விசுவாசித்து தேவன் அருளி செய்ததை புறக்கணித்தார்கள் என்று நமக்கு புரிகிறது. நீங்கள் ஒருபோதும் மரிப்பதில்லை என்கின்ற பாம்பினுடைய சொல்லில் தானே அவைகள் சேருகிறது. மரித்தவர் ஜீவிக்கிறார், மரணத்திற்கு முன்பு உண்டாயிருந்தைக்காட்டிலும் சக்தியுள்ளவராயிருக்கிறார்கள் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவார்கள். இல்லையா? நண்பர்களே, இங்கே தான் நாமெல்லோருக்கும் ஒரே மாதிரி தவறுகள் வருகிறது. சத்தியம் அவனிடத்தில் இல்லை என்றும் சத்தியத்தில் நிலை நிற்கவில்லை என்றும் அவன் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான் (யோவா:8:44) என்றும் கர்த்தர் யாரக்குறித்து சொன்னாரோ அந்தத் தவறான அறிவுரையே நாம் பின் தொடர்ந்திருக்கிறோம்.

பல நூற்றாண்டுகளாக ஜாதிகளுக்கிடையில் பிரபலமாயிருந்தாலும் அந்தகாரயுகத்தில் தான் இந்த பொய் சித்தாந்தங்கள் கிறிஸ்து சபையில் பிரபலம் அடைந்த்து. அந்த இருள் வருவதற்கு இந்த உபதேசங்களுக்கு மிக பெரிய பங்கு இருந்தது. நம்முடைய முற்பிதாக்கள், நீ சாகவே சாவாய் என்ற தெய்வ வார்த்தையை விசுவாசித்திருந்தால் மரித்தவர்களுக்காக உள்ள ஜெபம், அவருடைய பாவ சாந்திக்குள்ள் திவ்விய பலிகள், அவருடைய தண்டனையைக் குறித்துள்ள பயமுறுத்துகின்ற சிந்தைகள் இவைகளுக்கு இடமில்லதிருந்திருக்கும். மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் (பிரசங்கி.9:5) அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களை கவனியான் (யோபு.14:21) இந்த வசனங்களோடும் வேதம் ஆதிமுதல் அந்தம் வரை துணை நிற்க்கிறது.

மரித்தவருடைய நிலை (நிலைமை):-

மரித்தவர் எங்கே என்றும் அவருடைய நிலை என்ன என்றும் வேத புத்தகம் நமக்கு போதிக்கிறது. அதன்படி அவர்கள் சுக துக்கங்கள் பாக்கியம், பாக்கியமின்மை இதையெல்லாம் அனுபவிப்பதோ, மரித்தவரை உணர்த்தப்படும் வரை சூரியனுக்கு கீழே நடக்கின்ற எந்த ஒரு காரியமும் அறிவதேயில்லை. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பலத்தோடே செய். நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே எங்கின்ற ஞானியினுடைய வசனங்களை நாங்கள் உங்களுக்கு ஞாபகபடுத்துகிறோம். (பாதாளத்தில் - பிரேதக்குழியில் - ஷியோலில்).

பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பொல்லாதவரும் மீதியுள்ளவரையும் குறித்து அவர் மரணத்தில் நித்திரை என்று துல்லியமான நிலையில் தான் எழுதியிருக்கிறது என்று உங்களுடைய கவனத்திற்கு நாங்கள் கொண்டுவருகிறோம். இயேசுவில் நித்திரை செய்கின்றவரையும், கிறிஸ்துவில் நித்திரை செய்கின்றவரையும் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறதை உங்களுடைய ஞாபகத்திற்கு கொண்டுவருகிறோம். மரித்தவர் உயிர்த்தெழாவிட்டால் அவர் நரகத்திற்கு சென்றதாக பவுல் சொல்கிறார். கிறிஸ்துவுக்குள் நித்திரயடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே (1கொரி:15:18), பரலொகத்திலோ சுத்தீகரண இடத்திலோ, நரக வேதனையிலோ அவர்களுக்கு கட்டுபடுவதற்கு முடியுமா? அப்படியாக யாரும் உபதேசிக்கவில்லை. அது நிச்சயம். அவர்கள் இப்போதே கெட்டுப் போன நிலையில் தான் இருக்கிறார்கள். மரணத்தினுடைய வல்லமையில் இருந்து விடுதலைக்காக ஒரு உயிர்த்தெழுதல் இல்லாமல் இருந்தால் இந்த நாசம் பரிபூரண நாசத்திற்கு வழி வகுத்திருக்கும். ஆகையால் தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவவளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான்.3:16)

சுருக்கமாக சொன்னால் தெய்வம் மனுஷன் சிருஷ்ட்டிப்பில் உயர்ந்தபடியில் தன்னுடைய ரூபத்திலும் சாயலிலும் உண்டாக்கினார் என்றும், ஏதேனில் அவன் ஜீவன் அதனுடைய பரிபூரண அளவில் இருந்ததென்றும் நிறைந்த கீழ்படிதல் கொண்டு அதை நிலை நிறுத்தியிருந்திருப்பார் என்றும் வேதபுத்தகம் சொல்லுகிறது ஆனால் சோதனையில் அல்லது பரீட்சையில் அவன் தோற்றுப் போகவும் மரண தண்டனைக்கு பாத்திரனாகவும் செய்தான். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் (ஆதிய:2:17) மரணம் அங்கே ஆரம்பித்தது, 930 வருடங்களுக்கு பிறகு ஆதிபிதாவான ஆதாமினை பிரேதக்குழியில் அடக்கம் செய்தும், அவனுடைய சந்ததி பாரம்பரியமாக அவனுடைய பலவீனத்திலும், மரண தண்டனையில் வந்தடையவும் செய்தது. அவன் அந்த நாளில் மரணமடைந்த அது 24 மணி கொண்ட ஒரு நாளல்ல பதிலாக ஓராயிரம் ஆண்டு நாட்கள் என்று அப்போஸ்த்லனாகிய பேதுரு குறிப்பிட்டிருக்கிறார். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போல. (2 பேதுரு.3:8)

தெய்வீக ஸ்நேகம் காணப்பட்டது:

இந்த மகா 6 நாட்களில் (ஆறு தினங்களின்) காலங்களில் மரண தண்டனை மனுஷனை சில விஷங்களில் மிருகத்தினுடைய பிடியில் அமர்ந்ததும், தெய்வம் தயையால் உயிர்த்தெழுதல் தராமல் போயிருந்தால் வருங்கால வாழ்க்கை நம்பிக்கையற்ற நிலையில் வந்திருந்திருக்கும். ஸ்திரியின் சந்ததி பாம்பின் தலை நசுக்கும் என்ற வசனத்தில் இது அடங்கியிருக்கிறது. பூமியிலுள்ள வம்சங்களை எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். (ஆதி.12:3;28:14)என்று இதைக்குறித்து அபிரகமுக்கு ஒரு தடவை மேலும் கடவுள் விவரித்தார். ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்கு பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களின் நிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்.(1 பேதுரு 3:18) பிதாவான ஆதாமினுடைய தண்டனையை சொந்தமாய் ஏற்றெடுத்துக் கொண்டு மனித குலத்தை ரட்சிப்பதற்காக தெய்வம் தம்முடைய ஒரே குமாரனை அனுப்பினது ஆயிரமாண்டு மகாதினங்களில் நான்கு தினங்கள் முடியும் போதுதான். கல்வாரியில் நிவர்த்தியாக்கின அந்த மீட்பு வேலையின் பலனாக நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது (அப்போ:24:15 மரண தண்டனையில் இருந்தும் பிரேதக்குழியான தடவறையில் இருந்தும் விடுதல் பெற வேண்டியதாயிருக்கிறது.

நித்திய தண்டனையல்ல மரணம் தான் :

பாவத்தின் சம்பளம் நித்திய தண்டனையல்ல மரணம் தான் என்று திருவசனங்கள் (ரோமர்.6:23) தெளிவாக போதிப்பிக்கும் பொழுது, ஆதாமினுடைய பாவத்தின் சம்பளம் நித்திய தண்டனை தான் என்று அங்கீகரிப்பதில் உள்ள பொய்யை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய வீழ்ச்சியிலேயும் அவன் மேல் சுமத்தப்பட்ட நியாயத் தீர்ப்பினையும் குறித்து ஆதியாகமம் புத்தகத்தில் கொடுத்திருக்கின்ற அந்த விவரத்தை நாம் பரிசோதிக்கும் பொழுது கேவலம் மரண தண்டனையை குறித்தல்லாமல் ஒரு நித்திய வருங்கால தண்டனையைக் குறித்து ஒரு முன்னறிவிப்பும் நமக்கு கொடுக்கப்படவில்லை. அதற்கு யாதொல்ரு முன்னறிவிப்பும் பார்ப்பதற்கு இல்லை. இரண்டாம் தடவையாக இதை திரும்பவும் கர்த்த்டர் சொல்லுகிறார், நீ பூமிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்கு திரும்பப்படும் என்று. பிசாசுக்களையோ, அக்கினி தண்டனைகளையோ இவைகளைக் குறித்த்து ஒரு வார்த்தைக் கூட உரையாடவில்லை.

இந்த நிலையில் கடந்த கால உபதேசங்கள் என்று அப்போஸ்தலன் நாமகரணம் செய்யப்பட்ட பொய்யான உபதேசங்களைக் கொண்டு சத்துரு நமது பிதாக்களை இருட்டின் யுகத்திற்கு வஞ்சித்ததெப்படி? பாவத்திற்கு மரணதண்டனை அல்லாமல் வேறொன்றும் தீர்க்கதரிசனங்களில் சொல்லப்படவில்லை என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புதிய எற்பாடும் இதற்கு சேர்ந்ததாகத்தான் இருக்கிறது என்று பார்க்க வண்டும். புதிய எற்பாட்டில் முக்கால் பங்கும் எழுதியிருக்கின்ற பரிசுத்தனாகிய பவுல் தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். (அப்போ:20:26) என்று நமக்கு நிச்சயத்தை தருகிறார். ஆனாலும் நித்தியதண்டனையைக் குறித்த ஒரு உபதேசமும் அவர் தரவேயில்லை. பதிலாக பாவத்தையும் அதனுடைய தண்டனையையும் குறித்துள்ள இதே காரியம் தான் உபதேசித்துக் கொண்டு எப்படியாக ஓரே மனுஷனாலே பாவமும், பவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லோருக்கும் வந்தது போலவும், இதுவுமாயிற்று.: (ரோமர் .5:12) என்று சொல்லியிருக்கிறார். ஒரே மனுஷனிலோ எல்லா மனுஷரிலோ வந்தது நித்திய தண்டனையல்ல, மரணம்தான் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

மரணம் போதுமன தண்டனையா?

மரணம் பாவத்திற்கு போதுமான தண்டனையல்ல என்று யாராவது சொன்னால், நாம் செய்ய போகிற காரியங்களை காட்டி அந்த வாதங்கள் நியாயமானதல்ல என்று புரியவைப்பது தான். கீழ்படியாமையினால் வந்த பாவம் முகாந்திரம் ஆதாமிற்கு அவனுடைய பாக்கிய வீடாயிருந்த பறுதீஸ் இல்லாமல் போயிற்று. பூரண ஜீவனும் போயிற்று. பதிலுக்கு நோயும், வேதனையும் துக்கமும், மரணமும் வந்தது. இதற்கும் மேலே 3000 கோடிக்கதிகமாக வருகின்ற அவனுடைய வம்சபரம்பரை மொத்ததில், பிதாவில் இருந்து மனதிலும், சரீரத்திலும் பலவீனங்கள் ஜன்ம சுபாவமாக பெற்றுக்கொண்டும், அப்போஸ்தலன் சொல்லியிருக்கிறது போல சர்வ சிருஷ்ட்டியும் ஏகமாய்த்தவித்து பிரசவ வேதனைப்படுகிறது. (ரோமர்.8:22) ஆனால் ஆசீர்வாதங்கள் இப்படி பிதாக்கள் பாரம்பரியமாக கிடைத்ததில்லை.

3000 கோடியிலும் அதிகமாக வருகின்ற மக்கள் துர்குணத்தில் உருவாகியும் பாவத்தில் கர்ப்பம் தரித்திருக்கின்ற நிலைமையை (சங்கீ 51:5) பாருங்கள். துக்க்கத்திலும் கீழ்ப்படியாமையிலும் கடந்து போன சில மணி நேரமோ, தினங்களோ, ஆண்டுகளோ அவர்களை மரணகிடக்கைக்கு கொண்டு வந்ததிருக்கிறது. கண்ணீர் விட்டுக்கொண்டு துக்கிக்கின்ற இதயங்களுமாய் நண்பர்கள் அந்த மரணகிடக்கைக்கு அருகாமையில் நின்றார்கள். வெண்ணீரோடு வெண்ணீராய், பொடியோடு பொடியாய் அவர்கள் பிரேதக்குழிக்குள் கொண்டு செல்லப்பட்டார்கள். சுற்றுபாடுகள் கணக்கிலெடுக்கும் போதும் நோய், துக்கம், வேதனை, மரணம், மனதளவிலும், சன்மார்கத்திலுமுண்டான தோல்வி, இவைகள் பூரணமாகவும் பிதாவாகிய ஆதாமினுடைய பாவத்தின் பலனாக வந்தது என்று ஞாபகத்திற்கு கொண்டு வரும்போது விதித்திருக்கின்ற தண்டனை போதுமானதல்ல என்றும் இதைக் காட்டிலிலும், அனேக லட்சங்கள் மரண யாத்திரையில் அந்தமில்லா கஷ்டங்களும் பாயப்படுதலும் ஆழமான நரகத்திற்கு பிசாசுகளால் உபத்திரவப்பட்டு வாழலாம் எங்கின்ற நீதி தேவைப்படுமென்றோ, தேவைப்படுவதற்கு முடியுமா என்றோ புத்தியுள்ளவர் யாராவது சொல்லுவார்களா? அன்பு நண்பர்களே யாராவது ஒருவர் இந்த நிலைமையில் சிந்திப்பது, சிந்தித்து ஒரு தீர்மனம் எடுப்பவர் ஒருபோதும் யுக்தி சிந்தை, ஞானம் ஒன்றும் அவர்களுக்கு இல்லை என்றும் அல்லது இவைகள் எல்லாம் போயே போச்சு என்றுதான் காட்டுகிறது.

தெய்வம் நிச்சயித்த தண்டனை நீதி பூர்வமானது:

மரண தண்டனை நீதிக்கு விபரீதமென்றோ, மிகவும் அதிகமென்றோ யாரும் சிந்திக்க வேண்டாம். குற்றவாளீயான ஆதாமினை அழித்துக்கொண்டு தெய்வத்திற்கு, தம்முடைய நியாயத்தீர்ப்பு நடப்பாக்கியிருந்திருக்கலாம். ஒரு நொடி பொழுதில் வம்ச நாசம் செய்திருந்திருக்கலாம். ஆனால் அந்த மார்க்கம் இவையைக்காட்டிலும் நன்றாக இருந்திருக்குமா? ஒருபோதும் இல்லை. தரித்திரத்திலும், கஷ்டத்திலும் துக்கத்திலும் கூட வாழ்க்கை இன்பமுள்ளதாயிருக்கிறது. இதற்கும் மேலே ஒவ்வொரு மனிதனோடும் எங்கின்ற ந்லையிலுள்ள ஒரு சோதனைக்கு இடம் கிடைக்கும் பொழுது பிதாவான ஆதாமுக்கு கிடைத்தைக் காட்டிலும் அறிவு பூர்வமான ஒரு காரியம் கிடைப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவதில் இந்த ஆயுளில் பரீட்சைகளூம், அனுபங்களும் சமாதான நியமங்கள் போல நமக்கு உதவியாக அமைய வேண்டுமென்று தான் தேவசித்தம். திவ்வியமான கருணையும், ஜீவிப்பிக்கின்ற வேளையும் உயித்தெழுதல் வேளையும் இல்லாமலிருந்தால் நாத்திகர்கள் சொல்லுகிறது போல தான் நம்முடைய வர்கத்திற்கு வரும்கால ஜீவிதத்தில் நம்பிக்கை இல்லமல் இருந்திருக்கும்.

நம்முடைய மீட்புக்கு இயேசு மரித்தார் என்ற காரணத்தால், தண்டனையுடைய வேறோரு தெளிவும் கூட நமக்கு பார்க்க முடிகிறது. நமக்கு எதிராயுள்ள தண்டனை நித்திய தண்டனையாக இருக்குமென்றால் நம்முடைய தண்டனைக்கு இயேசுவும் அந்த விலை தான் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். நீதிமானாகிய அவர் நீதி கெட்டவர்களுக்காக நித்திய தண்டனை அனுபவிப்பது ஆசியமாயிருந்திருக்கும். ஆனால் நித்திய தண்டனையல்ல நம்முடைய சிட்சை. ஆதலால் நமக்காக அவர் நித்திய தண்டனை அனுபவித்ததேயில்லை. மரணம் மட்டும் தான் சிட்சை. அல்லது மரணம் மட்டும் தான் தண்டனை. ஆதலால் கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். தேவனுடைய கிறுபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார்.(கொரி.15:3; எபிரேயர்.2:9) அதாமினுடைய பாவத்திற்கு மறு விலையாக மாற முடிகின்றவர்களுக்கு சர்வலோகத்தின் பாவத்திற்கு திவ்விய நீதியின் முன்பாக விடுதலை பெற முடியும். காரணம் ஆதாம் ஒருவர் மட்டும் தான் சோதிக்கப்பட்டார். ஆதாமினுடைய சந்ததிகளாகிய நாம் அவர் முகாந்திரம் (ஆதாம் முகாந்திரம்) அவைகளில் பங்குள்ளவராக மாறினோம்.

(தொடரும்...)

No comments:

Post a Comment